விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் தற்போது கோயிலில் மனோஜ் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை மீனா பார்த்து விடுகிறார். அவர் முத்துவிற்கு இந்த செய்தியை போன் செய்து சொல்ல, முத்து உடனடியாக வந்து மனோஜை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவரை பார்க்கும் விஜயா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கனடாவிற்கு செல்வதற்காக ரூ.14 லட்சம் ரூபாயை கேட்டு மனோஜ் வீட்டில் உள்ள அனைவரையும் தொந்தரவு செய்து வருகிறார். ரோகிணி உங்கள் அப்பாவிடம் சென்று வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கனடா செல்என ஐடியா கொடுக்கிறார். மனோஜும் அவரது தந்தையிடம் பணம் கேட்கிறார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டதால், கோவிலில் பிச்சை எடுக்க முடிவு செய்கிறார் மனோஜ். மீனா செல்லும் கோவில் வாசலில் அவர் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
கோவிலுக்கு வரும் மீனா, மனோஜை பார்த்துவிட்டு முத்துவை அழைக்கிறார். முத்து மனோஜை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விஜயாவிடம் காட்டுகிறார். அவரை பார்க்கும் விஜயா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television