நேர்த்திக்கடன் என்கிற பெயரில் ரோகிணியை வச்சி செய்யும் விஜயா.! காமெடியான ப்ரோமோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரோகிணியை அழைத்துக்கொண்டு கோயிலுக்கு செல்லும் விஜயா அவரை அங்கு படாத பாடு படுத்துகிறார். நேர்த்திக்கடன் என்கிற பெயரில் அவர் ரோகிணியை படுத்தி எடுக்கிறார். விஜயாவின் தொல்லைகள் தாங்க முடியாமல் ரோகிணி அலறிக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நேர்த்திக்கடன் என்கிற பெயரில் ரோகிணியை வச்சி செய்யும் விஜயா.! காமெடியான ப்ரோமோ 1
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயாவின் மூத்த மகளாக இருக்கும் ரோகிணி பல பொய்களை சொல்லி அவரது மகனை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் இந்த உண்மை எதுவுமே விஜயாவிற்கு இத்தனை நாட்களாக தெரியாமல் இருந்து வருகிறது. இதனால் ரோகிணி எப்போது விஜயாவிடம் மாட்டிக் கொள்வார்? என்கிற எதிர்பார்ப்புடன் கதை நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ரோகிணியை அழைத்துக்கொண்டு கோவிலுக்கச் செல்லும் விஜயா, அங்கு நேர்த்திக்கடன் இருப்பதாக கூறுகிறார்.

அங்கு ரோகிணி கைகளில் சூடம் ஏற்றியும், தோப்புக்கரணம் போட வைத்தும், அங்கப் பிரதட்சணம் செய்ய வைத்தும் அவரை படுத்தி எடுக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்