கர்ப்பமாக இருப்பதை பாக்யாவிடம் போட்டு உடைத்த ராதிகா.! அதிர்ச்சியில் உறைந்து போன பாக்யா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் செய்தியை பாக்யா தெரிந்து கொள்கிறார். இந்த உண்மையை ராதிகாவே பாக்கியாவிடம் போட்டு உடைக்க, பாக்யா அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருப்பதை பாக்யாவிடம் போட்டு உடைத்த ராதிகா.! அதிர்ச்சியில் உறைந்து போன பாக்யா 1

விளம்பரம்

சில நாட்களாகவே பாக்கியலட்சுமி சீரியல் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. அதற்கு முக்கிய காரணம் முதல் மனைவியை விவாகரத்து செய்யும் கோபி, இரண்டாவதாக தனது காதலியை திருமணம் செய்து கொள்கிறார். முதல் மனைவியின் மகன்களுக்கே குழந்தை பிறந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் கோபிக்கும் குழந்தை பிறக்க இருக்கிறது. கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா கர்ப்பமாக இருக்கிறார்.

கர்ப்பமாக இருப்பதை பாக்யாவிடம் போட்டு உடைத்த ராதிகா.! அதிர்ச்சியில் உறைந்து போன பாக்யா 3
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கு ப்ரோமோவில் ராதிகா அதிக புளிப்பு சுவை உடைய பொருட்களை விரும்பி உண்ணுகிறார். இதை பார்த்து சந்தேகப்படும் பாக்யா, இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்ப, அப்போது ராதிகா கர்ப்பமாக இருக்கும் செய்தியை பாக்யாவிடம் போட்டு உடைக்கிறார். இதை கேட்கும் பாக்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment