சிறகடிக்க சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்து மற்றும் மீனா இருவரும் கணவன் மனைவியாக வாழத் தொடங்கி இருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மனங்களில் இடம் பிடித்த ஒரு தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வசந்த் ஹீரோவாகவும், கோமதிப்பிரியா ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் உடல்நிலை சரியில்லாமல் படுத்து இருக்கிறார் மீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது அங்கு வரும் முத்து உடல்நிலை சரியில்லாமல் படுத்து இருக்கிறாள். அவரை சாப்பிட்டியா என்று கூட யாரும் கேட்கவில்லையா? என்ன திட்டி விட்டு மனைவிக்கு சாப்பாடு ஊட்டுகிறார். இதனால் நெகிழ்ந்து போன மீனா அவரை கட்டி அணைத்துக் கொள்கிறார். பின்னர் மீனாவுக்கு முத்துவும் நெற்றியில் முத்தம் கொடுக்கிறார். பின்னர் இருவரும் கணவன் மனைவிகளாக தங்களது வாழ்க்கையை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. மறுநாள் காலையில் குளித்து முடித்து வரும் மீனாவை பார்த்து விஜயாவுக்கு சந்தேகம் வருகிறது.
இவள் எதற்கு சிரித்த மாதிரியே இருக்கிறாள் என்று விஜயா சந்தேகப்படுகிறார். பின்னர் அலுவலகத்திற்கு செல்லும் முத்துவுக்கு மீனா ஊட்டி விடுகிறார். இதை வீட்டில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television