விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது முத்துவை பிரிந்து மீனா ஆடி மாதத்திற்காக தனது தாயார் வீட்டுக்கு செல்கிறார். மீனாவை பிரிய மனம் இல்லாமல் முத்து அனுப்பி வைக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கி குறுகிய காலத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்து வரும் ஒரு தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது முத்துவும் மீனாவும் இணைந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனாவை ஆடி மாசம் என்பதால் அழைத்துச் செல்வதற்காக மீனாவின் தாயார் வந்திருக்கிறார். அவர் வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டு மீனாவை அழைத்துச் செல்கிறார். செல்வதற்கு முன்பாக மீனா தனது மாமனாரிடம் சென்று மாத்திரைகளை எல்லாம் நேரத்திற்கு போட்டுக் கொள்ளுங்கள் என்று கூற, அப்போது விஜயா அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீ கிளம்பு நல்ல நேரம் முடிவதற்குள் நீ கிளம்பு என்று துரத்துகிறார்.
பின்னர் அங்கு வரும் முத்து தனது தந்தை அண்ணாமலையிடம் சென்று உன் மனைவி ஆடி மாதத்திற்கு வீட்டிற்கு போக மாட்டாரா என்று கேட்க, அவள் ஏன் போக வேண்டும்? என்று அண்ணாமலை கேட்கிறார். அப்படி போனால் நீ ஒரு மாதம் சந்தோஷமாக இருப்பில்லை என்று சொல்லி தனது தந்தையை கலாய்க்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television