தனது மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனது குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடி இருக்கின்றனர். அந்தப் புகைப்படங்களை அவர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். அந்தப் புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். கடந்த வருடம் சென்னையில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சில மாதங்களிலேயே இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகி இருப்பதாக அறிவித்திருந்தனர்.

தனது மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.! 1

விளம்பரம்

இது சர்ச்சையான நிலையில் 5 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றது முடிந்து விட்டதாக விளக்கம் அளித்திருந்தனர். தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை இருவரும் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி தனது பிள்ளைகளுடன் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

தனது மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.! 3

விளம்பரம்

மேலும் தனது மகன்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்திருந்தார் இதில் N என்பது உலகின் மிகச்சிறந்த தாயான நயன்தாராவை குறிப்பிடும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

தொடர்புடையவை  லவ் டுடே பட டயலாக் சொல்லி மகனை பங்கமாக கலாய்த்து தள்ளிய ராதிகா சரத்குமார்.!

தனது மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.! 5

விளம்பரம்

இன்னமும் தனது மகன்களின் முகம் தை நேரடியாக காட்டாத நயன்தாரா, முகத்தை மறைத்து புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதுபோல ஒரு புகைப்படத்தை தான் தற்போது நயன்தாரா பகிர்ந்து இருக்கிறார். கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் கொண்டாடப்பட இருக்கிறது. வருகிற 29ஆம் தேதி மலையாள மக்கள் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாட இருக்கின்றனர்.

தனது மகன்களுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிகள்.! 7

விளம்பரம்

இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த நயன்தாராவும் தனது வீட்டில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். மகன்களுக்கு பட்டு வேட்டி உடுத்தி அவர்களுக்கு உணவளித்து இருவரையும் கொஞ்சுவது போன்ற புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அந்த இரு படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.!

விளம்பரம்

Leave a Comment