வீட்டிற்கு வந்த உடனேயே விஜயாவை வச்சி செய்யும் ஸ்ருதி.! விழி பிதுங்கும் விஜயா.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் ஸ்ருதியின் செயல்பாடுகளால் தற்போது விஜயா மற்றும் அண்ணாமலை இருவரும் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். விளக்கக் கூட பொருத்த தெரியாமல் ஸ்ருதி தடுமாறிக் கொண்டிருப்பது விஜயாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலை – விஜயா தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூன்றாவது மகன் ரவி அண்ணாமலையின் குடும்ப எதிரியின் மகள் ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்த அண்ணாமலைக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இந்த நிலையில் ரவி மற்றும் ஸ்ருதி இருவரையும் மீண்டும் தங்களது வீட்டிற்கே அழைத்து வருகிறார் விஜயா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்கு வந்த உடனேயே விஜயாவை வச்சி செய்யும் ஸ்ருதி.! விழி பிதுங்கும் விஜயா.! 1

ஸ்ருதிக்கு ஏற்கனவே பெற்றோர்கள் பார்த்து வைத்த பிஜு என்ற நபர் ஸ்ருதியை திருமணம் செய்ய முடியாத விரக்தியில் அவர் மீது ஆசிட் அடிப்பதற்காக வருகிறார். ஆனால் அவரை சரியான சமயத்தில் மீனா காப்பாற்றுகிறார். இதனால் ஸ்ருதி மற்றும் ரவிக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லி அவர்கள் மீண்டும் அண்ணாமலையின் வீட்டிற்கு செல்கின்றனர். அங்கு ஸ்ருதியை விளக்கேற்ற சொல்ல தீப்பெட்டியை பற்ற வைக்க தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். இதனால் அண்ணாமலை கடுப்பாகிறார். பின்னர் விஜயா, “பாலும் பழம் சாப்பிட வேண்டும், ரவி சாப்பிட்ட பின்பு நீ பால் குடிக்க வேண்டும்” என்று சொல்ல, முதலில் ஸ்ருதி எடுத்துக் குடித்துவிட்டு நான் குடித்தப் பின்பு அவன் குடிக்கட்டும் என்று கூறுகிறார்.


அதன் பின்னர் உங்கள் இருவருக்கும் சாந்தி முகூர்த்தம் செய்ய வேண்டும் என்று விஜயா சொல்ல, அதுதான் ஏற்கனவே முடிந்து விட்டதே என்று சொல்லி ஸ்ருதி விஜயாவை பங்கமாக கலாய்க்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் விஜயாவிற்கு இவர்தான் சரியான மருமகள் என்று சொல்லி கலாய்த்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்