விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் புதிதாக வந்த மருமகள் ஸ்ருதிக்கு ஆதரவாக விஜயா செய்த காரியங்களை மீனா நடு சபையில் வைத்து போட்டு உடைத்து விடுகிறார். இதனால் விஜயா என்ன செய்வது என்று தெரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலை – விஜயா தம்பதிகளுக்கு கடைசி மகனாக இருக்கும் ரவி, ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்த திருமணத்தில் அண்ணாமலைக்கு சற்றும் உடன்பாடு கிடையாது. ஏனென்றால் அண்ணாமலையின் பகையாளியின் மகள்தான் ஸ்ருதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய எதிரியின் மகளையே தன் மகன் திருமணம் செய்து கொண்டு விட்டானே என்கிற வேதனையில் அண்ணாமலைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அவரை தற்போது காப்பாற்றி கொண்டு வந்துள்ளனர். நிலைமை இப்படி இருக்க தற்போது ரவியையும், ஸ்ருதியையும் மீண்டும் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார் விஜயா. அண்ணாமலையும் ரவியையும், ஸ்ருதியையும் ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் விஜயா காலையில் காபியை எடுத்துக்கொண்டு ரவியின் அறைக்குச் செல்கிறார். அப்போது ஸ்ருதி எங்கே? என்று கேட்க அவள் வேலைக்குப் போய்விட்டதாக ரவி கூறுகிறார்.
பின்னர் ஹாலில் வந்து அமர்ந்திருக்கும் விஜயா ஸ்ருதி வாக்கிங் சென்று இருப்பதாக ஏதோ பொய் சொல்ல, அப்போது அங்கு வரும் மீனா, “அவர் அங்கெல்லாம் ஒன்றும் செல்லவில்லை, அவர் வேலைக்கு செல்வதாக என்னிடம் கூறிவிட்டு தான் சென்றார்” என்று உண்மைகளை போட்டு உடைக்கிறார். இதனால் அண்ணாமலை விஜயாவை முறைத்துப் பார்க்க, அவர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television