ரவியை தெருவில் படுக்க சொல்லிவிட்டு அறையை பூட்டிய முத்து.! மீனாவை திட்டும் விஜயா..!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரவி தனது அறையில் படுக்கக் கூடாது என்று சொல்லி முத்து அறையை பூட்டிவிட்டு வெளியே செல்கிறார். பின்னர் விஜயா தனது மருமகள் மீனாவிடம் கேட்க கூடாத கேள்விகளை எல்லாம் கேட்டு அவரை நோகடிக்கிறார். இதனால் மனமுடைந்து போன மீனா அழுது கொண்டு நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு யாருமே ஆறுதல் கூற வரவில்லை. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலைக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதில் கடைசி மகன் ரவி அண்ணாமலையின் எதிரியின் மகளான ஸ்ருதியை வீட்டிற்கு தெரியாமல் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவியை தெருவில் படுக்க சொல்லிவிட்டு அறையை பூட்டிய முத்து.! மீனாவை திட்டும் விஜயா..! 1

ரவியின் இந்த செயல் அண்ணாமலைக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுக்கிறது. வேதனையில் அவருக்கு நெஞ்சுவலி வருகிறது. அவர் இருதய அறுவை சிகிச்சை செய்து முடித்திருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் ரவியை வீட்டிற்கு அவரது தாயார் விஜயா அழைத்து வந்துள்ளார். அண்ணாமலையும் அவர்களின் வருகையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் ரவி மற்றும் ஸ்ருதி இருவரும் தங்கிக் கொள்வதற்கு அறை வசதி இல்லை. அதனால் விஜயா மீனா மற்றும் முத்துவின் அறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறுகிறார். இதற்கு முத்து கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மீனாவிற்கு தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு வருமாறு முத்து கூறுகிறார். மீனாவும் தனக்கு தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு வெளியில் வருகிறார்.


மீனா வெளியே வந்த பின்பு எதிர்பாராத விதமாக முத்து அறையை பூட்டிவிட்டு செல்கிறார். இதை பார்த்த விஜயா அதிர்ச்சியில் உறைந்து போய் முத்துவிடம் கேள்வி கேட்கிறார். அப்போது இவன் செய்த வேலைக்கு இவன் தெருவில் தான் படுக்க வேண்டும் என்று கூறிவிட்ட முத்து சென்று விடுகிறார். பின்னர் விஜயா மீனாவைப் பார்த்து, “நீ இல்லாமல் அவன் ஒரு நாள் தூங்க மாட்டானா? இல்லை முன்னாள் தனியாக ஒருநாள் படுத்து தூங்க முடியாதா?” என்று ஒரு மருமகளிடம் கேட்கக் கூடாத கேள்விகளை கேட்டு மிகவும் அசிங்கப்படுத்துகிறார். இதனால் மனமுடைந்து போன மீனா அழுது கொண்டிருக்கிறார். அவருக்கு ஆறுதல் கூறக் கூட யாருமே வரவில்லை. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்