பிக் பாஸ் சீசன் 7ன் 73 ஆது நாளுக்கான இன்றைய கடைசி புரோமோ வெளியாகியிருக்கிறது .அதில் தற்போது கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து குதித்து வெளியேற முயற்சி செய்கிறார். அவரை பிக் பாஸ் அழைத்து என்ன ஆனது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது பதில் சொல்ல முடியாமல் கூல் சுரேஷ் அழுது கொண்டிருக்கிறார். வெளியில் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகர் கூல் சுரேஷ். காமெடி செய்கிறேன் என்கிற பெயரில் இவரது பேச்சுகளும், செயல்களும் பல சமயம் பலரை முகம் சுளிக்க வைத்திருந்தது. தொகுப்பாளி கழுத்தில் மாலை போடுவது போன்று இவர் செய்த பல செயல்கள் பலரை முகம் சுளிக்க வைத்திருந்தது. ஆனால் பிக் பாஸ் இவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்திருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஒரு வலுவான போட்டியாளராக விளையாடி வருகிறார் கூல் சுரேஷ். வெளியில் இவர் மீது இருந்த விமர்சனங்கள் பலவற்றையும் மாற்றியிருந்தார். இருப்பினும் நேற்று நாமினேஷன் டாஸ்க்கில் இவர் செய்தது பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தது. விசித்ராவின் உடைய கையில் எடுத்துக் கொண்ட இவர் அதை பிரித்து வைத்து பேசியது அங்கு இருந்த பெண் போட்டியாளர்கள் பலருக்குமே எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. பலரும் கூல் சுரேஷ் இந்த நடவடிக்கையை கண்டித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கூல் சுரேஷ் கேப்டன் மணியிடம் தனக்கு வீட்டு நினைப்பாக இருப்பதாகவும், தான் வெளியில் செல்ல வேண்டும் என்றும் கூறிக் கொண்டிருக்கிறார். பின்னர் ஒரு சேரை எடுத்துக் கொண்டு வந்து போட்டு சுவர் மீது ஏறத் தொடங்குகிறார்.

இதே போல சீசன் 1ல் பரணியும் சுவர் மீது ஏறிய காரணத்தினால் விதிகளை மீறி விட்டதாக கூறி அவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்பி இருந்தனர். அதேபோல தற்போது கூல் சுரேஷையும் வீட்டிலிருந்து வெளியேற்றுவார்களா? என்கிற எதிர்பார்ப்புடன் இந்த ப்ரோமோ தற்போது முடிந்துள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television