விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் மீனா ரோகிணி, ஸ்ருதி ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த விஜயா இவர்கள் மூவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று மனதில் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அண்ணாமலை இவர்களை பிரிக்கவே முடியாது, போய் உன் வேலையை பார் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். இனி மூன்று பேரையும் சேரவிடாமல் விஜயா சில சதி வேலைகளில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை – விஜயா தம்பதிகளின் மூன்று மகன்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. ரோகிணி, மீனா மற்றும் ஸ்ருதி ஆகிய மூன்று மருமகள்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி அண்ணாமலை அறிவுரை செய்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மீனா காபி போட்டுக் கொண்டு வந்து ரோகிணி மற்றும் ஸ்ருதியிடம் கொடுக்கிறார். அப்போது மீனாவையும் தங்களுடன் அமரச் சொல்லி ஸ்ருதி கூறுகிறார். மீனாவும் அவர்களுக்கு அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்ருதி ரோகிணியிடம், “நம் இரண்டு பேரின் கணவர்களும் நல்லவர்கள், நாம் தப்பித்து விட்டோம்” என்று சொல்லி மீனாவை குத்திக் காட்டும் விதமாக பேசுகிறார்.
அப்போது அங்கு வரும் விஜயா இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்திருப்பதை பார்த்து எரிச்சல் அடைகிறார். பின்னர் மனதிற்குள் அவர்கள் மூவரையும் எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அண்ணாமலை அவர்கள் மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லி விஜயாவை திட்டி அனுப்பி விடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television