மீனாவுக்காக புது தாலி வாங்கி வந்த முத்து.! விஜயாவுக்கு செம்ம நோஸ் கட்.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் விஜயா சில நாட்களுக்கு முன்பு மீனாவிடம் இருந்து தாலி உட்பட அனைத்து நகைகளையும் எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது முத்து மீனாவுக்கு புது தாலியை வாங்கி வருகிறார் இதனால் விஜயா மூக்கு உடைபட்டு அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவுக்காக புது தாலி வாங்கி வந்த முத்து.! விஜயாவுக்கு செம்ம நோஸ் கட்.! ப்ரோமோ இதோ.! 1
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா தனது இரண்டாவது மகனாக இருக்கும் முத்து மற்றும் அவரது மனைவியை மிகவும் மோசமாக நடத்துகிறார். சில நாட்களுக்கு முன்பு மீனாவுக்கு நாங்கள் தான் நகை போட்டு திருமணம் செய்து கூட்டி வந்தோம் என ஸ்ருதியின் தாயாரிடம் விஜயா கூறுகிறார். இதனால் மிகவும் அவமானமாக உணர்ந்த மீனா தாலி உள்ளிட்ட அனைத்து நகைகளையும் கழற்றி விஜயாவிடமே கொடுக்கிறார். மேலும் தனது கணவர் உழைத்து வாங்கி தரும் நகையைத்தான் இனி அணிந்து கொள்ள போகிறேன் என்று அவர் சவால் விடுக்கிறார்.

இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மனைவிக்காக புது தாலியை வாங்கிக் கொண்டு வந்து விஜயாவின் மூக்கை உடைக்கிறார் முத்து. “கார் ஓட்டி நகையெல்லாம் வாங்க முடியாது என்று சிலர் பேசினார்கள், இப்பொழுது நான் எனது மனைவிக்காக வந்திருக்கிறேன்” என்று கூறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்