மீனாவுக்காக புது தாலி வாங்கி வந்து விஜயா முகத்தில் கரியை பூசிய முத்து.! தரமான சம்பவம் முத்து.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து தற்போது தனது மனைவிக்காக புது தாலியை வாங்கி வந்து விஜயா முகத்தில் கரியை பூசுகிறார். முத்துவின் இந்த செயலை பார்த்த விஜயா பதில் பேச முடியாமல் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருக்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ஒரு முறை விஜயா ஸ்ருதியின் தாயார் முன்னிலையில் மீனாவுக்கு நாங்கள்தான் நகையை போட்டு திருமணம் செய்து கொண்டு வந்தோம் என்கிற உண்மையை கூறுகிறார். இதனால் கோபமடையும் மீனா நகை உள்ளிட்ட அனைத்தையும் கழற்றி விஜயாவிடமே கொடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவுக்காக புது தாலி வாங்கி வந்து விஜயா முகத்தில் கரியை பூசிய முத்து.! தரமான சம்பவம் முத்து.! 1
மேலும் தனது கணவன் உழைத்து சம்பாதித்து வாங்கித் தரும் நகையை தான் இனி அணிந்து கொள்ள போகிறேன் என்றும் அவர் சபதம் எடுக்கிறார். இந்த நிலையில் தற்போது வீட்டில் இது குறித்து மீண்டும் சண்டை எழுகிறது. அப்போது முத்து தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு செல்கிறார். அங்கு ஏலச்சீட்டு நடைபெற்று வருகிறது. அதில் ஏலத்தில் நாற்பதாயிரம் ரூபாயை பிடித்து தனது மனைவிக்காக தாலி ஒன்றை வாங்கி வருகிறார் முத்து. இதை வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டுகிறார். மேலும் விஜயா முத்துவின் இந்த செயலை பார்த்து ஒன்று பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறார்.


“கால் டாக்ஸி ஓட்டுபவனால் தாலி வாங்கி தர முடியாது என்றும், நீ காலத்திற்கும் மஞ்சள் கயிறு தான் அணிந்திருக்க வேண்டும்” என்று காலையில் மீனாவை விஜயா மிகவும் அசிங்கப்படுத்திய நிலையில், அன்றைய தினமே முத்து மீனாவுக்காக தாலி வாங்கி வந்திருப்பது மீனாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த அழகான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்