விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. அதில் தற்போது மனோஜ் வேலை வெட்டிக்கு செல்லாமல் பார்க்கில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு, தூங்கிக் கொண்டிருப்பதை வீடியோவாக எடுத்து முத்து வீட்டில் இருக்கும் அனைவரிடமும் போட்டுக் காண்பிக்கிறார். இதனால் ரோகிணி அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். வீட்டில் உள்ள அனைவரிடமும் தற்போது கையும் களவுமாக மனோஜ் மாட்டியிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் மூத்த மகனாக இருக்கும் மனோஜ் வேலை வெட்டிக்கு செல்லாமல் தான் ஒரு ஷோரூமில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறேன் என்று வீட்டில் பொய் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் மனோஜின் தாயார் விஜயாவை தவிர வீட்டில் யாருக்கும் தெரியாது. மனோஜ் வேலைக்கு சென்று கொண்டிருப்பதாக அனைவரும் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது முத்து மனோஜ் வேலைக்கு செல்லாமல் பூங்காவில் அமர்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறார். அதை வீடியோவாக எடுத்துக்கொண்டு வந்து தற்போது வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு காண்பித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வரும் மனோஜ் தன்னுடைய ஷோரூமுக்கு நடிகர் விஜய் வந்ததாக பொய் கூறிக் கொண்டிருக்கிறார். இதனால் கோபமான முத்து, “வெட்டி முண்டம், தண்டச்சோறு தினமும் படுத்து தூங்கி எந்திரிச்சு விட்டு வந்து என்னை நீ கேலி செய்து கொண்டிருக்கிறாயா?” என்று கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் ரோகிணியும்_ மனோஜும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television