பூர்ணிமா ரவி ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம்.! ‘செவப்பி’ படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.!

பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி ஹீரோயினாக நடித்திருக்கும் “செவப்பி’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த டீசருக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கோயமுத்தூரை சேர்ந்தவர் பூர்ணிமா ரவி. இவர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக இளம் வயதிலேயே சென்னைக்கு வந்தார். பின்பு ‘அராத்தி’ என்னும் youtube சேனல் ஒன்றை தொடங்கிய அவர், மோனோ ஆக்டிங் என்று சொல்லக்கூடிய தனியாக இருந்து முழு கான்செப்ட்டையும் நடிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலமாக அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் மட்டும் 6,50,000 க்கும் அதிகமான பின் தொடர்பவர்களை கொண்டுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பூர்ணிமா ரவி ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம்.! 'செவப்பி' படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 1

விளம்பரம்

இந்த நிலையில் பூர்ணிமா ரவிக்கு பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா. ஆரம்பம் முதலே மாயாவுடன் இவர் இணைந்து விளையாடியது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. பூர்ணிமா வெளியேற வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் தொடர்ந்து கன்டென்ட் கொடுப்பவராக இருந்ததால் பூர்ணிமாவை பிக் பாஸ் வெளியேற்றாமல் வைத்திருந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் ரூ.16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார். அவரின் இந்த முடிவை ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தனர். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே பூர்ணிமா நடித்திருந்த ‘செவப்பி’ படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

தொடர்புடையவை  இன்ஸ்டா Cringe மன்னன் 'இன்பா' மீது சைபர் கிரைம் போலீஸ் அதிரடி வழக்கு பதிவு.!

பூர்ணிமா ரவி ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம்.! 'செவப்பி' படத்தின் டீசர் வெளியானது.! வீடியோ உள்ளே.! 3
தற்போது பிக் பாஸில் இருந்து பூர்ணிமா வெளியேறிய கையோடு ‘செவப்பி’ படத்தின் டீசரையும் படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். இந்தப் படத்தை ராஜேஸ்வர் காளி சாமி மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன் என்ற இருவர் தயாரித்திருக்க, ரிஷிகாந்த், பூர்ணிமா ரவி, செபாஸ்டின் ஆண்டனி, திருநாவுக்கரசு, டில்லி, சர்வன் அத்வேந்தன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ‘ஆஹா தமிழ்’ என்கிற ஓடிடி தளத்தில் இந்த படம் வருகிற 12ம் தேதி நேரடியாக வெளியாக இருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Aha Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment