முத்து, மீனா, மனோஜை வீட்டிற்கு அழைத்து வந்த ரோஹிணியின் மகன்.! மாட்டப்போகும் ரோஹிணி.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. மனோஜை தொடர்ந்து தற்போது ரோகிணியும் விரைவில் முத்து விடம் மாட்டிக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் அண்ணாமலையின் மூத்த மகனாக இருக்கும் மனோஜ் வேலை வெட்டிக்குச் செல்லாமல் பார்க்கில் படுத்து தூங்கி எழுந்து கொண்டிருக்கிறார். இந்த விஷயத்தை முத்து போனில் படம் பிடித்து வந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் காட்டிவிடுகிறார். இதனால் மனோஜ் அவமானமாக உணருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி ரோகிணி தனது தாய் மற்றும் குழந்தையை சந்திப்பதற்காக செல்கிறார். ஆனால் மனோஜ் ரோகிணி கோபித்துக் கொண்டு சென்று விட்டதாகநினைத்துக் கொண்டிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்து, மீனா, மனோஜை வீட்டிற்கு அழைத்து வந்த ரோஹிணியின் மகன்.! மாட்டப்போகும் ரோஹிணி.! 1
இதனால் ரோகிணியை தேடி முத்து, மீனா மற்றும் மனோஜ் ஆகிய மூவரும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ரோகிணியின் மகன் ரோட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது பந்து கார் மீது பட்டு, முத்து காரை நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்க்கிறார். ஏற்கனவே மீனாவுக்கும் முத்துவுக்கும் ரோகிணியின் மகனை தெரியும் ஆனால் இந்த சிறுவன் ரோகிணியின் மகன் என்பது தெரியாது. அந்த சிறுவனை வீட்டில் கொண்டு விடுவதற்காக முத்து, மீனா, மனோஜ் ஆகிய மூவரும் செல்கின்றனர். அதை வெளியிலிருந்து கவனிக்கும் ரோகிணி தனது செருப்பை எடுத்துக்கொண்டு கொல்லை புரத்தில் சென்று ஒளிந்து கொள்கிறார். ஆனால் அந்த சிறுவனோ ரோகிணி எங்கே? என்று ரோகினியின் அம்மாவிடம் கேட்கிறான்.

அப்போது மீனா, “உங்கள் மகளையா இந்த சிறுவன் தேடுகிறான்? என கேட்கிறார். இதனால் ரோகிணி பயத்தில் உறைந்து போய் நின்று கொண்டிருக்கிறார். ஒருவேளை அந்த சிறுவன் ரோகிணி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து விட்டால் ரோகிணியும் முத்து மற்றும. மீனாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்வார் என்று தெரிகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்