யோவ் எங்கயா இருக்க? இன்னும் வீட்டிற்கு வந்து சேராத பிரவுன் மணி.! செம்ம கடுப்பில் முத்து.! ப்ரோமோ இதோ

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி தன்னுடைய மாமா என்று செட்டப் செய்து வைத்திருக்கும் நபர் ப்ரவுன் மணி இன்னமும் ரோகிணியின் வீட்டுக்கு வந்து சேரவில்லை. இதனால் ரோகிணி பயத்தில் உறைந்து போய் இருக்கிறார். மேலும் ரோகிணியின் மாமாவை வரவேற்க வீட்டில் விஜயா வீட்டில் தடபுடலாக ஏற்பாடுகளை செய்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யோவ் எங்கயா இருக்க? இன்னும் வீட்டிற்கு வந்து சேராத பிரவுன் மணி.! செம்ம கடுப்பில் முத்து.! ப்ரோமோ இதோ 1

ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் இருக்கும் நிலையில் மனோஜிடம் பல பொய்களைச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறார். தான் மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் என்றும், தனது தந்தை மலேசியாவில் இருக்கிறார் என்றும் அவர் அடுக்கடுக்காக பொய்களை கூறியிருக்கிறார். இந்த நிலையில் பொங்கல் சீருக்கு ஸ்ருதியின் வீட்டில் இருந்து வந்த சீர் செய்கின்றனர். அதேபோல மீனாவின் வீட்டில் இருந்தும் அவர்களால் முடிந்த அளவிற்கு சீர் செய்கின்றனர். எனவே ரோகிணி வீட்டில் இருந்து யாராவது வர வேண்டும் என்று விஜயாவின் கோரிக்கை வைக்கிறார். அதை ஏற்று ரோகிணியும் ஒரு ஆளை செட்டப் செய்கிறார்.

கறிக்கடையில் வேலை பார்த்து வரும் ப்ரவுன் மணி என்பவரை தன்னுடைய மாமா என்று செட்டப் செய்து வைத்திருக்கும் அவர், அவரிடம் ஒரு லட்ச ரூபாயை கொடுத்து மலேசியாவில் இருந்து வந்திருப்பதாக பொய் கூறி சீர் செய்யுமாறு சொல்லிவிட்டு பாட்டி ஊருக்கு வந்திருக்கிறார். ஆனால் இன்னும் அந்த நபர் வீட்டிற்கு வந்து சேரவில்லை. ஆனால் விஜயா வீட்டில் தடபுடலாக ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்