விஜய் தொலைக்காட்சியின் டாப் ஹிட் சீரியலாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கிராமத்தில் பொங்கல் விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உறியடி அடிக்கும் நிகழ்வில் மீனா மனோஜின் மண்டையிலேயே ஒன்று போடுகிறார். மேலும் உரியை சரியாக அடித்து இந்த போட்டியில் முத்து வெற்றி பெறுகிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவிற்காக அண்ணாமலை தனது மகன், மருமகள்களை அழைத்துக்கொண்டு தனது தாயின் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்கிறார். அங்கு ரோகிணி தனது மாமா என்று சொல்லி ஒருவரை செட்டப் செய்து அழைத்து வருகிறார். அவர் கறிக்கடையில் வேலை பார்ப்பவர் என்பதால் எப்போதும் ஆடு வெட்டுவது பற்றிய பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் மீது முத்துவிற்கு சந்தேகம் வருகிறது. அவரிடமிருந்து உண்மையை வாங்குவதற்கு முத்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் கிராமத்தில் பொங்கல் விழா நடந்து கொண்டிருக்கிறது. அதில் நடைபெறும் போட்டிகளில் முத்து வெற்றி பெறுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television