‘லியோ’ படம் வெளியான பிறகு அந்த படத்தை வச்சி செய்தார்கள் – விஜய் தந்தை சந்திரசேகர் அதிரடி பேச்சு.!

‘லியோ’ படம் குறித்தும், லோகேஷ் கனகராஜ் குறித்தும் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பேசியிருக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விமல் நடிப்பில், எழில் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘தேசிங்கு ராஜா’. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதன் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இதன் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது. இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. படத்தின் விழாவும் இன்று நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஜெயம் ரவி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் ‘லியோ’ படம் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

'லியோ' படம் வெளியான பிறகு அந்த படத்தை வச்சி செய்தார்கள் - விஜய் தந்தை சந்திரசேகர் அதிரடி பேச்சு.! 1
அதில் பேசிய அவர், “சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். அந்த இயக்குனருக்கு போன் செய்து முதல் பாதி மிக அருமையாக இருக்கிறது என்று சொன்னேன். அவரும் கேட்டுக் கொண்டிருந்தார் பின்னர் இரண்டாம் பாதி அவ்வளவு சிறப்பாக இல்லை, அந்த மதத்தில் இதுபோன்ற நம்பிக்கை எல்லாம் இல்லை, ஒரு தகப்பன் தன் பிள்ளையை பலி கொடுக்க மாட்டார்” என்று சொன்னேன். முதல் பாதி நன்றாக இருப்பதாக சொன்ன போது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த இயக்குனர் இரண்டாவது பாகம் நன்றாக இல்லை என்று சொல்லும் போது, ‘நான் சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் சார், அப்புறம் பேசுறேன்னு’ போனை வைத்துவிட்டார். அந்த படம் வெளியான பின்பு பலரும் அந்த படத்தை ரோல் செய்தார்கள்” என பேசியிருந்தார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பாஜக தலைவர் "கர்நாடக சிங்கம்" அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் டீசர் வெளியானது

'லியோ' படம் வெளியான பிறகு அந்த படத்தை வச்சி செய்தார்கள் - விஜய் தந்தை சந்திரசேகர் அதிரடி பேச்சு.! 3
சந்திரசேகரின் இந்த பேச்சு அதிர்வலைகளை எழுப்பி இருக்கிறது. பலரும் இவர் ‘லியோ’ படத்தை தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: ABP Nadu

விளம்பரம்

Leave a Comment