“எனக்கு அம்மா ன்னா அவ்ளோ புடிக்கும்” கண்கலங்கி முத்து கூறிய வார்த்தைகள்.! மனம் மாறுவரா விஜயா?

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்து தனது தாயார் விஜயா பற்றி கண்கலங்கி பேசிக் கொண்டிருக்கிறார். விஜயாவின் பாசத்திற்காக முத்து ஏங்கிக் கொண்டிருப்பதை அவர் தற்போது வீட்டில் உள்ள அனைவர் முன்னிலையிலும் போட்டு உடைத்து விடுகிறார். இதைக் கேட்கும் விஜயா கண்கலங்கி அமர்ந்திருக்கிறார். இனியாவது விஜயா முத்துவை புரிந்து கொள்வாரா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"எனக்கு அம்மா ன்னா அவ்ளோ புடிக்கும்" கண்கலங்கி முத்து கூறிய வார்த்தைகள்.! மனம் மாறுவரா விஜயா? 1
‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயா தனது இரண்டாவது மகன் முத்துவை எப்போதும் வெறுத்து ஒதுக்கி கொண்டே இருக்கிறார். ஆனால் முத்து விஜயாவின் பாசத்திற்காக ஏங்குகிறார். இந்த நிலையில் தற்போது அனைவரும் பாட்டியின் சொந்த ஊருக்கு பொங்கல் திருவிழாவிற்கு வந்திருக்கின்றனர். அங்கு ஸ்ருதி, ட்ரூத் or டேர் என்று சொல்லக்கூடிய விளையாட்டு ஒன்றை விளையாடுகிறார். அப்போது முத்து தனது தாயார் விஜயா பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். ஒரு பொங்கல் தினத்தன்று என்னை பார்ட்டியின் வீட்டில் கொண்டு வந்து விட்டு விட்டார்கள். அப்போதெல்லாம் நான் அம்மா பற்றி கேட்டுக் கொண்டே இருப்பேன்.


எனக்கு அம்மா என்றால் சாமி மாதிரி என்று சொல்லி கண் கலங்கி அழுகிறார். இதை கேட்கும் விஜயாவும் மனமுடைந்து அமர்ந்திருக்கிறார். இனியாவது விஜயா முத்துவை புரிந்து கொண்டு மனம் மாற வேண்டும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்