‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்க்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ரோஹிணியின் தாயார் மற்றும் மகனை முத்துவும், மீனாவும் இணைந்து வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அதை பார்த்த ரோஹிணி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் பல பரபரப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ரோஹிணி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் விஷயத்தை மறைத்து விஜயாவின் மூத்த மகனான மனோஜை திருமணம் செய்து கொள்கிறார். அவர் தான் பெரிய பணக்காரி என்றும் தனது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் பொய் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் ரோஹிணியின் மகனுக்கு கண்களில் ஆபரேஷன் நடந்துள்ளது. இதை பார்த்த முத்து மீனா ரோஹிணியின் மகனையும், அவரது தாயாரையும் தனது வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். இதைப் பார்த்த ரோஹிணி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television