“ஆம் சீரியல் முடிய போகிறது” இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ‘எதிர்நீச்சல்’ சீரியல் நடிகைகள்.!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வருவதை அந்த சீரியலில் நடித்து வரும் நடிகைகள் இருவர் உறுதி செய்து இருக்கின்றனர். 2022 பிப்ரவரி மாதம் தொடங்கி 730 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். நடிகர் விஜயின் அம்மா சோபனா தொடங்கி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலரும் இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சில மாதங்களாகவே மக்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்று வருகிறது ‘எதிர்நீச்சல்’

"ஆம் சீரியல் முடிய போகிறது" இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைகள்.! 1

விளம்பரம்

"ஆம் சீரியல் முடிய போகிறது" இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைகள்.! 3

"ஆம் சீரியல் முடிய போகிறது" இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைகள்.! 5

விளம்பரம்

அதற்கு முக்கிய காரணம், ஒரு பிரச்சனை முடிவதற்குள் அடுத்த பிரச்சனைகள் உருவாகி இடியாப்ப சிக்கல்கள் போல புதுப்புது பிரச்சினைகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. ஆனால் எதற்கும் தீர்வு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. மேலும் ‘எதிர்நீச்சல்’ என பெயர் வைத்துக் கொண்டு பெண்கள் எதிர் நீச்சலே போடாமல் இருந்து வருவதாகவும் விமர்சிக்கப்பட்டது. மக்களின் மிகுந்த அதிர்ச்சியை பெற்ற இந்த சீரியல் முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், இந்த சீரியலில் ஆதி குணசேகரனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யபிரியா இன்ஸ்டாகிராமில் இதை உறுதி செய்தார்.

தொடர்புடையவை  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறிய விசித்ரா.! இதுதான் காரணமா?

"ஆம் சீரியல் முடிய போகிறது" இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 'எதிர்நீச்சல்' சீரியல் நடிகைகள்.! 7

விளம்பரம்

ரசிகர் ஒருவர், சத்யா பிரியாவிடம் “அம்மா எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு ‘ஆம்’ என பதிலளித்து இருக்கிறார். மேலும் ஆதிரையாக நடித்து வரும் சத்யா தேவராஜனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சில விஷயங்கள் முடிவுக்கு வரும்போது அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என பகிர்ந்திருக்கிறார். இவர்களின் இந்த பதிவுகளை பார்த்த பின்னர் ‘எதிர்நீச்சல்’ சீரியல் முடிவுக்கு வருவதை தற்போது ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த சீரியல் முடிந்த பின்னர் கேப்ரியல்லா நடிக்கும் புது தொடரான ‘மருமகள்’ ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment