‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா சமைத்த உணவில் பல்லி கிடந்ததால் மீண்டும் வீட்டில் பிரச்சனை எழுந்துள்ளது. அந்த சாப்பாட்டை சாப்பிட போன அண்ணாமலை கையை முத்து தட்டி விடுகிறார். பின்னர் வீட்டிற்கு வரும் மீனவிடம் எங்களை எல்லாம் கொலை செய்ய பார்க்கிறாயா என்று சொல்லி மீனாவுக்கும், விஜயாவுக்கும் சண்டை வருகிறது. ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒளிபரப்பாகத் தொடங்கிய சிலர் மாதங்களிலேயே மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக மாறிப் போயிருக்கிறது. தற்போது கதைப்படி அண்ணாமலையின் கடைசி மகன் தந்தையின் விருப்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணத்திற்கு மீனாவும் உடந்தையாக இருக்கிறார். இதனால் மனமுடைந்து போல அண்ணாமலையின் உடல்நிலை மோசமாகிறது. அவருக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், உணவு சமைத்து விட்டேன் உங்களுக்கு தேவைப்படும் போது சாப்பிடுங்கள் என்று அண்ணாமலையிடம் சொல்லிவிட்டு மீனா வெளியில் செல்கிறார். அப்போது விஜயாவும் பார்வதியும் உணவை சாப்பிட்டுவிட்டு அதை மூடாமல் திறந்து வைத்து விட்டு செல்கின்றனர். அந்த உணவில் பல்லி விழுகிறது. இதை கவனிக்காத அண்ணாமலை உணவை போட்டு சாப்பிட தொடங்குகிறார்.
அப்போது அங்கு வரும் முத்து உணவில் பல்லி கிடப்பதை பார்த்து விடுகிறார். அவர் அண்ணாமலையின் கைகளை தட்டி விடுகிறார். அந்த நேரம் பார்த்து வீட்டிற்கு வரும் விஜயா, எங்கள் அனைவரையும் கொலை செய்ய திட்டமிட்டு இருக்கிறாயா என்று சொல்லி மீனாவை சகட்டு மேனிக்கு திட்டுகிறார். இதனால் வீட்டில் மீண்டும் பிரச்சினை வருகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television