மீனா வைத்த வேண்டுதல்.! மலை மீது உள்ள கோவிலுக்கு மீனாவை தூக்கிக்கொண்டு சென்ற முத்து.!

வெளியிட்டது

‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனாவை தூக்கிக்கொண்டு முத்து வேண்டுதலை நிறைவேற்றுகிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியலில் தற்போது கதைப்படி முத்துவின் தம்பி தனது தந்தையின் பேச்சை மீறி ஒரு பெண்ணை ஓடிப்போய் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மணமுடைந்த முத்துவின் தந்தை அண்ணாமலைக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்படுவதால் முத்து தனது காரை விற்கிறார். விஜயா தனது நகைகளை விற்கிறார். பின்னர் அறுவை சிகிச்சை நடந்து முடிகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனா வைத்த வேண்டுதல்.! மலை மீது உள்ள கோவிலுக்கு மீனாவை தூக்கிக்கொண்டு சென்ற முத்து.! 1
கார் இல்லாததால் பல இடங்களில் அவமானப்படும் முத்து ஒரு அப்பார்ட்மெண்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களை துடைக்கும் வேலையில் சேர்கிறார். இதை பார்த்த மீனா முத்துவுக்கு எப்படியாவது காரை திருப்பி தர வேண்டுமென்று நினைக்கிறார். பின்னர் அண்ணாமலை வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து முத்துவிற்கு காரை மீட்டுக் கொடுக்கிறார். கார் திரும்பி கிடைத்த சந்தோஷத்தில் முத்து மீனாவை அழைத்துக் கொண்டு ஹோட்டலுக்கு செல்கிறார். ஆனால் மீனா தான் ஒரு வேண்டுதல் வைத்திருப்பதாக கூறி முத்துவை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு மலை மீது இருக்கும் கோவிலுக்கு கீழிருந்து மனைவியை தூக்கிக்கொண்டு கணவர் செல்ல வேண்டும் இதுதான் வேண்டுதல் என மீனா கூறுகிறார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த முத்து தன்னால் முடியாது என்று மறுக்கிறார். பின்னர் மீனாவை தூக்கிக்கொண்டு மலை மீது உள்ள கோவிலுக்கு செல்கிறார். அந்த அழகான ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்