மீனாவின் தம்பி சத்யாவை ஓங்கி அறை விட்ட ரோஹிணி.! கதறி அழும் மீனா.! இன்றைய எபிசோட் விவரம்.!

வெளியிட்டது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் முத்துவின் தம்பி ரவியை சக்தியின் தந்தை ஆள் வைத்து அடிக்கிறார். அப்போது உள்ளே வரும் முத்து ரவுடிகளை அடித்து துரத்தி விட்டு சக்தியின் தந்தையிடம் கேள்வி கேட்கப் போவதாக சொல்லி கிளம்பி செல்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவின் தம்பி சத்யாவை ஓங்கி அறை விட்ட ரோஹிணி.! கதறி அழும் மீனா.! இன்றைய எபிசோட் விவரம்.! 1
சக்தியின் தந்தைக்கும், முத்துவின் தந்தைக்கும் ஏற்கனவே பகை இருக்கும் நிலையில், சக்தி முத்துவின் தம்பி ரவியை காதலித்து வருகிறார். இந்த விஷயம் சக்தியின் தந்தைக்கு தெரிந்து மகள் காதலித்து வரும் ரவியை ஆள் வைத்து அடிக்க ஏற்பாடு செய்திருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ரவியை ரவுடிகள் நடுரோட்டில் வைத்து அடித்து துவைத்து கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் முத்து ரவுடிகளை அடித்துவிட்டு தனது தம்பியை காப்பாற்றுகிறார். நிலைமை ஒருபுறம் எப்படி இருக்க மறுபுறம் மீனாவின் தம்பி பைக்கை திருடியதற்காக மன்னிப்பு கேட்டு மீனா வீட்டிற்கு வருகிறார்.


ஆனால் அவர் வீட்டில் இருந்து எதையோ திருட வந்துள்ளதாக கூறி விஜயாவும் மனோஜும் சேர்ந்து அவரை மிகக் கேவலமாக நடத்துகின்றனர். மேலும் மனோஜ் சத்யாவை அடித்து வீட்டில் இருந்து வெளியே துரத்துகிறார். சத்யா கொண்டு வந்த பைகளையும் மனோஜ் பரிசோதனை செய்கிறார். அப்போது நிலை தடுமாறும் சத்யா மனோஜின் சட்டையை பிடிக்கிறார். அப்போது என் கணவனின் சட்டையை பிடிக்கிறாயா என்று சொல்லி கோபத்தில் ரோகினி சத்யாவை அறைந்து விடுகிறார் அந்த சமயம் உள்ளே வரும் முத்து நிலைமையை சத்யாவிடம் விசாரிக்கிறார். சத்யா பைக் திருடியதற்காக மன்னிப்பு கேட்க வந்த விஷயத்தை கூறுகிறார். இதனால் விஜயா மனோஜ் மற்றும் ரோகிணி ஆகியோர் கூனி குறுகி போய் அமர்ந்திருக்கின்றனர்.

அப்போது உள்ளே வரும் முத்து, மனோஜ் மற்றும் ரோகினி ஆகிய இருவரையும் திட்டித் தீர்க்கிறார். மேலும் மனோஜ் தனக்கும் ரவிக்கும் சேர வேண்டிய 27 லட்சம் ரூபாயை திருடி கொண்டு சென்ற விஷயத்தை கூறி இவன்தான் முதல் திருடன். நீங்கள் எல்லாம் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? என்று சொல்லி முத்து ரோகிணியிடம் கேள்வி கேட்கிறார். மேலும் சத்யாவை உள்ளே சென்று சாப்பிடுமாறு அனுப்பி வைக்கிறார். நீங்களும் தற்போது வெளியாகிருக்கும் அந்த வீடியோவைக் காண.. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்