தரமான சம்பவம் லோடிங்.! ரசிகர்களுக்காக தயாராகி வரும் லியோ நாணயங்கள்.! வைரல் புகைப்படங்கள் இதோ

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்காக வித்தியாசமான முறையில் ப்ரோமோஷன் பணிகளை செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக லியோ முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள் உருவாகி வருகிறது. அந்த நாணயங்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தனது 67வது படமாக லியோ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷுடன் கை கோர்த்து இருக்கிறார் விஜய். இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தரமான சம்பவம் லோடிங்.! ரசிகர்களுக்காக தயாராகி வரும் லியோ நாணயங்கள்.! வைரல் புகைப்படங்கள் இதோ 1
இந்த படம் துவங்கிய போதே டைட்டிலை ஒரு டீசருடன் அறிவித்திருந்தார் லோகேஷ். அதில் மலைப்பகுதியில் உள்ள ஒரு சாக்லேட் ஃபேக்டரியில் ஒரு விஜய் சாக்லேட் செய்து கொண்டிருப்பது போலவும், இன்னொரு விஜய் கத்தியை பட்டைத் தீட்டி சாக்லேட் குழம்பில் முக்கி எடுத்து “ப்ளடி ஸ்வீட்” என்று சொல்வது போலவும் இருந்தது. இதனால் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. டீசர், ட்ரைலர் வெளியாகும் போது இதுகுறித்து முழு விவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருப்பதால் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  சாய் பல்லவியின் குழந்தை பருவ புகைப்படங்களை பார்த்து இருக்கீங்களா? யாரும் பார்க்காத புகைப்படங்கள்.!

தரமான சம்பவம் லோடிங்.! ரசிகர்களுக்காக தயாராகி வரும் லியோ நாணயங்கள்.! வைரல் புகைப்படங்கள் இதோ 3

இந்த நிலையில் படத்திலிருந்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் லியோ படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக லியோ என முத்திரைப் பொறிக்கப்பட்ட நாணயங்கள் உருவாகி வருவதாக தெரிகிறது. ஒருபுறம் லியோ என எழுத்து வடிவிலும், இன்னொரு புறம் சிங்க முத்திரையுடனும் இந்த நாணயங்கள் தயாராகி வருவதாக தெரிகிறது. படத்தின் ப்ரோமோஷனை அதிகரிக்கும் வண்ணம் உருவாகியுள்ள இந்த நாணயங்கள் விற்பனைக்கு வரவுள்ளதா? இல்லை படம் வெளியாகும் போது ரசிகர்களுக்கு கொடுப்பதற்காக இந்த நாணயங்கள் தயாராகி வருகிறதா? என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment