விஜயாவை அடிக்கப் போன அண்ணாமலை.! ரோஹிணி பெயரை இழுத்துவிட்ட விஜயா.!

வெளியிட்டது

சிறகடிக்க ஆசை சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பைனான்ஸ் நிறுவனத்தை தேடி வரும் அனைவருக்கும் விஜயா வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 17 லட்சம் ரூபாய் வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் கையெழுத்து போட்டால்தான் விஜயாவை நான் விடுதலை செய்வேன் என்று பைனான்ஸ் நிறுவனம் கூறுகிறது. பின்னர் அனைவரும் சேர்ந்து கையெழுத்து போட்டு விஜயாவை மீட்டு வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயாவை அடிக்கப் போன அண்ணாமலை.! ரோஹிணி பெயரை இழுத்துவிட்ட விஜயா.! 1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடி வருகிறது. தனது மகனுக்காக வீட்டு பத்திரத்தை வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் அடமானம் வைக்கிறார் விஜயா. அந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். இதனால் கோபமடைந்த பைனான்ஸ் நிறுவனம் தற்போது விஜயாவின் வீட்டிற்கு வந்து அவரை இழுத்துச் செல்கிறது. வழியில் மீனாவின் தம்பி வேண்டுமென்றே விஜயாவின் பணத்தை பறித்துக் கொண்டு ஓடுகிறார். இதனால் பணமில்லாமல் நிறுவனத்திற்கு செல்லும் விஜயாவை பைனான்ஸ் நிறுவனம் தனி அறையில் அடைத்து பூட்டி வைத்து விடுகிறது. இந்த விஷயம் தெரிந்து குடும்பத்தினர் அனைவரும் தற்போது நிறுவனத்திற்கு வருகின்றனர்.

வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து 17 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதை அனைவரிடமும் பைனான்ஸ் நிறுவன ஊழியர் கூறுகிறார். இதனால் கோபமடைந்த அண்ணாமலை விஜயாவை அடிக்கப் போகிறார். பின்னர் வீட்டிற்கு வரும் அவரிடம் எதற்கு இவ்வளவு செலவு செய்தாய் என்று கேட்க, ரோகிணிக்கு பியூட்டி பார்லர் வைக்கும் ஆசை இருந்தது அதனால் தான் இப்படி செய்தேன் என்று சொல்ல, ரோகிணி அதிர்ச்சியில் உடைந்து போய் நிற்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்