ரோஹிணி மனோஜ் திருமணத்தை நிறுத்த மண்டபத்திற்கு வந்த பி.ஏ.? செம்ம ட்விஸ்டுடன் ப்ரோமோ.!

வெளியிட்டது

சிறகடிக்க ஆசை சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவருக்கும் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது அந்த திருமணத்தை நிறுத்துவதற்காக பி.ஏ காரில் வந்து கொண்டிருக்கிறார். அவர் திருமணத்திற்கு வந்தாரா இல்லையா என்கிற அதிர்ச்சியுடன் தற்போது அந்த ப்ரோமோ நிறைவடைந்து இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குறுகிய காலத்திலேயே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கும் ஒரு சீரியல் என்று சொன்னால் அது சிறகடிக்க ஆசை தான். இதில் ஹீரோ முத்துவுக்கும் மீனாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது. மீனாவை முத்துவின் அண்ணன் மனோஜ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். ஆனால் திருமணத்தன்று மனோஜ் ஓடிவிட்டதால் அவருக்கு பதிலாக அவரது தம்பி முத்துவை மீனா திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரோஹிணி மனோஜ் திருமணத்தை நிறுத்த மண்டபத்திற்கு வந்த பி.ஏ.? செம்ம ட்விஸ்டுடன் ப்ரோமோ.! 1

ஆரம்பத்தில் மீனாவும் முத்துவும் சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் மீண்டும் மனோஜ்க்கு ரோகிணி என்கிற பெண்ணை திருமணம் செய்த அவரது தாயார் விஜயா முடிவு செய்திருக்கிறார். ரோகிணிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. இந்த விஷயம் மனோஜ்க்கும் விஜயாவுக்கும் தெரியாது இந்த விஷயத்தை அவர்களிடம் போட்டு உடைப்பதற்காக ரோகிணி மீது ஆசைப்பட்டு கொண்டிருக்கும் பி.ஏ என்பவர் காரில் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரோகிணி பற்றிய உண்மைகளை கூறுவதற்காக காரில் வந்து கொண்டிருக்கும் பி.ஏ திருமணத்திற்கு வந்தாரா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

மனோஜும் ரோகிணியும் மாலையும் கழுத்துமாக திருமணக் கோலத்தில் அமர்ந்திருக்கின்றனர். அப்போது ரோகினியின் தோழியை விட்டு அந்த பிஏ மண்டபத்திற்கு வந்துள்ளாரா என பார்க்கச் சொல்லி ரோகிணி அனுப்புகிறார். பின்னர் ரோகிணி தலைநிமிர்ந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருக்கிறார். இதனால் பி.ஏ திருமணத்திற்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்