சிறகடிக்க சீரியலின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீனா வீட்டிற்கு வரும் முத்துவுக்கு மீனா மீன் குழம்பு, மீன் வறுவல், முட்டை குழம்பு என்று ஆக்கி பரிமாறி இருக்கிறார். அதை ருசித்து ருசித்து முத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. ஆரம்பத்தில் முட்டலும் மோதலுடன் முத்து மற்றும் மீனாவின் திருமண வாழ்க்கை ஆரம்பித்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் இணைந்து புதிய வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டு தற்போது தான் கணவன் மனைவியாக இணைந்து வாழத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால் அதற்குள் ஆடி மாதம் என்று சொல்லி முத்துவின் தாயார் விஜயா மீனாவை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார். எனவே மீனாவின் அம்மாவும், மீனாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். ஆனால் மீனா இல்லாமல் தனியாக முத்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார். மேலும் முத்துவின் அம்மா விஜயாவும் வீட்டில் எதுவும் சமைக்காமல் இருக்கிறார். இதனால் மீனாவிற்கு ஃபோன் செய்த முத்து எனக்கு ஏதாவது சமைத்து கொடு என்று கேட்க, உடனே மீனா மார்க்கெட்டுக்குச் சென்று மீன் வாங்கி வந்து சமைத்து வைத்திருக்கிறார்.
தற்போது வீட்டிற்கு வரும் முத்து மீன் குழம்பை ஒரு வெட்டு வெட்டுகிறார். மேலும் நிறைய சாப்பிட்டதால் தூக்கம் வருகிறது என்று சொல்லி மீனாவின் வீட்டிலேயே தூங்குவதற்கு ஏற்பாடுகளை செய்கிறார். இதனால் மீனாவின் தாயார் அதிர்ச்சியில் உறைந்து போய் கொண்டிருக்கிறார். ஆடி மாதம் என்று பிரித்து அழைத்து வந்தால் இவர்கள் இருவரும் சேர்ந்து இப்படி செய்து கொண்டிருக்கிறார்களே என்று அவர் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television