ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘சைரன்’ படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோணி பாக்யராஜின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தில் நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முதல் படத்தை இயக்கி விட்டு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அந்தோணி பாக்கியராஜ் முடிவோடு இருந்த நிலையில் தற்போது அவரின் திருமணம் முடிந்திருக்கிறது. திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு எளிமையாக நடைபெற்ற நிலையில், இன்று வரவேற்பு நடைபெற்றது.
இதில் சினிமா பிரபலங்கள் பலரும் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர். ஜெயம் ரவியை வைத்து தனது முதல் படமான ‘சைரன்’ படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் அந்தோணி பாக்கியராஜ்.
இவருக்கும் ரம்யா என்பவருக்கும் கடந்த மே 19ம் தேதி திருமணம் நடைபெற்றது.
புதுமுக இயக்குனர் என்று இல்லாமல் ஜெயம் ரவி பலருக்கும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் அந்தோணி பாக்யராஜுக்கும் அவர் ஒரு வாய்ப்பை கொடுத்தார்.
எனவே அவரின் திருமணத்தில் தனது மனைவி ஆர்த்தி ரவி மற்றும் மகன்களுடன் கலந்து கொண்டுள்ளார்.
அவர்களுடன் சிறுத்தை சிவா, சமுத்திரக்கனி, அழகம்பெருமாள், சினேகன் அவரது மனைவி கனிகா போன்ற பலரும் நேரில் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
ரசிகர்களும் புதுமண தம்பதிகளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.