Categories: சினிமா

சித் ஸ்ரீராம் குரலில் ‘சைரன்’ படத்தில் இருந்து ரொமான்டிக் பாடல் “நேற்று வரை..” வெளியானது.! வீடியோ உள்ளே.!

வெளியிட்டது

நடிகர் ஜெயம் ரவி, அனுபமா பரமேஸ்வரன், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘சைரன்’ படத்திலிருந்து தற்போது “நேற்று வரை…” என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. சித் ஸ்ரீராம் குரலில் மெலடியாக உருவாகி இருக்கும் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் ஜெயம்ரவி. 2002ம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான இவர், தற்போது வரை சுமார் 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சித் ஸ்ரீராம் குரலில் 'சைரன்' படத்தில் இருந்து ரொமான்டிக் பாடல் "நேற்று வரை.." வெளியானது.! வீடியோ உள்ளே.! 1
இவர் தற்போது அந்தோணி பாக்கியராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ‘சைரன்’ என்கிற படத்தில் நடித்திருக்கிறார். ‘விசுவாசம்’, ‘இரும்புத்திரை’ போன்ற படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அந்தோணி பாக்கியராஜ், ‘சைரன்’ படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த படத்தை “ஹோம் மூவி மேக்கர்ஸ்” நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்து வருகிறார். இவர் ஜெயம் ரவியின் மாமியார் ஆவார். ஏற்கனவே இவர் தயாரித்த ‘அடங்கமறு’, ‘பூமி’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் மூன்றாவது முறையாக தனது மருமகனை வைத்து ‘சைரன்’ படத்தை தயாரித்திருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. வருகிற பிப்ரவரி 16ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கும் நிலையில், தற்போது படத்தில் இருந்து சித் ஸ்ரீராம் குரலில் பாடி இருக்கும் “நேற்று வரை..” என்ற பாடலை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக்காக வெளியாகி இருக்கும் அந்த பாடலை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Sony Music South

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்