Categories: சினிமா

பிக்பாஸ்க்கு போகிறார்களா? ஸ்ரீநிதியும் டிடியும்? சர்ச்சையை கிளப்ப தயார் ஆன பிக்பாஸ்

வெளியிட்டது

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பிரபலாமாக இருக்கும் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாகும். இது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெளியாகிறது. அனைத்து மொழிகளிலும் அந்த மொழியில் இருக்கும் முண்ணனி நடிகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தமிழில் ஐந்து சீசன்களை மட்டுமே முடித்துள்ளது. 5 சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். 5 சீசன்கள் மட்டுமல்லாது அல்டிமேட் என்னும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வண்ணம் ஓடிடி தளத்திலும் வெளியானது. ஆனால் சீசன் 4, 5 மற்றும் அல்டிமேட் என்னும் சமீபத்தில் வெளியான எந்த நிகழ்ச்சியும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
கடைசியாக சீசன் 3 மட்டுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு வெளியான எந்தவொரு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களை கவரவில்லை என்றேதான் சொல்ல வேண்டும்.

பிக்பாஸ்க்கு போகிறார்களா? ஸ்ரீநிதியும் டிடியும்? சர்ச்சையை கிளப்ப தயார் ஆன பிக்பாஸ் 1

இந்த நிலையில் இந்த முறை மிக ச்ச்சையை கிளப்பும் போட்டியாளர்களை விஜய் டிவி களமிறக்க உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே குக் வித் கோமாளி தொகுப்பாளர் ரக்‌ஷன், சூப்பர் சிங்கர் புகழ் ராஜலெட்சுமி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், பாலிமர் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் மேலும் சிலரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. அந்த வகையில் சிம்புவைப் பற்றியும், தனது தோழி நட்சத்திரா பற்றியும் அடிக்கடி பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதியை களம் இறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினியும் களம் இறங்க உள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிகிறது. இதை தொகுத்து வழங்க உள்ள கமலஹாசன் செப்டம்பர் 13ம் தேதி இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான ப்ரோமோ ஷூட் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. சர்சைக்குரிய போட்டியளர்களை இறக்குவதன் மூலம், இந்த சீசனில் பல ரசிகர்களை பெற முடியும் என்றும், பிக்பாஸ் குழு திட்டமிட்டு வருகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்