குந்தவையாக மாறிய பிக்பாஸ் பிரபலம்..! திரிஷாவுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போலயே..!

பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர்தான் ஸ்ருதி பெரியசாமி. இவர் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் வரும் குந்தவை கதாபாத்திரமான திரிஷா கெட்டப்பில் போட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சேலத்தை சேர்ந்த ஸ்ருதி பெரியசாமி தற்போது மாடல் ஆக உள்ளார். இவர் கருப்பு நிறத்தில் இருப்பவர்களை தாழ்வு மனப்பான்மையில் இருந்து வெளியே கொண்டு வரும் வகையில் கடவுள்கள் கருப்பு நிறத்தில் இருப்பது போன்று போட்டோஷூட் நடத்தினார். 2019ம் ஆண்டு நடைபெற்ற FBB மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்ட இவர் இறுதி வரை வந்தார் ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை. 2020ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியிலும் கலந்து கொண்ட இவர் இறுதி வரை வந்தார், ஆனால் அதிலும் அவரால் வெல்ல முடியவில்லை.

குந்தவையாக மாறிய பிக்பாஸ் பிரபலம்..! திரிஷாவுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போலயே..! 1

விளம்பரம்

இதன் செல்வாக்கு காரணமாக இவர் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டார். இதில் இவருக்கும் தாமரைக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது. தாமரையின் நாணயத்தை திருடியதால் இவர் மீது அதிருப்தி நிலவியது. அதன் காரணமாக சில நாட்களிலேயே பிக்பாஸ்லிருந்து வெளியேற்றப்பட்டார். பிறகு மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் ஜூலியிடம் இருந்து போராடி 12 லட்சம் பணத்துடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். பிறகு எந்த பெரிய வாய்ப்புகளும் இல்லாததால், பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்று வருகிறார்.

தொடர்புடையவை  நீங்க இல்லைனா நான் இல்ல சார்.! SPB-ன் சமாதியில் கண்கலங்கி நின்ற மைக் மோகன்.!

குந்தவையாக மாறிய பிக்பாஸ் பிரபலம்..! திரிஷாவுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போலயே..! 3

விளம்பரம்

இந்த நிலையில் அவர் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக வந்த த்ரிஷாவை போலவே மேக்கப் அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த புகைப்படத்தை பகிர்ந்து குந்தவை செந்தாமரை நிறத்தினள், குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வட்டமாயிருந்தது. குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பவத்தின் இதழைப் போலக் காதளவு நீண்டு பொலிந்தன.குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப் போல் இருந்தது. குந்தவையின் இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. குந்தவையின் கூந்தலோ “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப் போல அமைந்து இருந்தது.“ என்ற கல்கியின் வரிகளுடன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

குந்தவையாக மாறிய பிக்பாஸ் பிரபலம்..! திரிஷாவுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போலயே..! 5

விளம்பரம்

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், திரிஷாவுக்கே டஃப் கொடுக்கிறார் ஸ்ருதி என்றும், மணிரத்தினம் மட்டும் இவரது புகைப்படத்தை பார்த்து இருந்தால் இவரையே குந்தவையாக போட்டு இருப்பார் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.!

குந்தவையாக மாறிய பிக்பாஸ் பிரபலம்..! திரிஷாவுக்கே செம்ம டஃப் கொடுப்பாங்க போலயே..! 7

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment