“உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா சிவா ப்ரோ”!! 15 வாட்டி சிவாஜி படத்தை திரையரங்களில் பார்த்தேன் என கூறிய சிவகார்த்திகேயன்!! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிஸன்!!

வெளியிட்டது

"உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா சிவா ப்ரோ"!! 15 வாட்டி சிவாஜி படத்தை திரையரங்களில் பார்த்தேன் என கூறிய சிவகார்த்திகேயன்!! மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிஸன்!! 1

தமிழ் சினிமாவில் இப்பொது இருக்கும் இளம் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த வித பின்புலமும் இன்றி, தன்னுடைய மீடியா வாழ்க்கையை விஜய் டிவியில் நகைச்சவை ஆர்டிஸ்டாக துவங்கிய அவர் பின் நட்சத்திர தொகுப்பாளராக உருவெடுத்து மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றார். பின் மெல்ல இயக்குனர் பாண்டியராஜின் “மெரினா” படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

பின் நடிகர் தனுஷின் தயாரிப்பான “எதிர்நீச்சல்” படம் மூலம் தனியாக நாயகனாக மாறினார். பின்னர் சில படங்கள் நடித்தாலும் இவரை மக்கள் நாயகனாக ஏற்றுக்கொண்ட படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படம் மூலமே. தனி ஹீரோவாக இவர் அடுத்தடுத்து நடித்த “எதிர் நீச்சல், காக்கி சட்டை, ரஜினி முருகன், நம்ம வீடு பிள்ளை, டாக்டர்” என அனைத்துமே தொடர் வெற்றிப்படங்கள்.

குறிப்பாக கடைசியாக வெளியன் டாக்டர் படம் இவருடைய முதல் 100 கோடி வசூல் படமாக மாறியது. அந்த வெற்றியை தொடர்ந்து கடந்த மே 13ஆம் தேதி வெளியான “டான்” படமும் 100 கோடி கிளப்பில் சேர்ந்தது. சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, பாலசரவணன், சிவாங்கி என பலர் நடிப்பில் வெளியான இந்த படம் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியானது.

காமெடி படமான இதில் காமெடி, பாடல்கள், காதல் காட்சிகள் என சிறப்பாக இருந்தாலும், படத்தின் இரண்டாம் பாதியில் வரும் கடைசி 30 நிமிட செண்டிமெண்ட் காட்சியை வைத்தே படம் இவ்வளவு பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. குறிப்பாக சமுத்திரக்கனி, சிவகார்திகேயனின் நடிப்பு, அனிருத்தின் மனதை வருடும் இசை, இயக்குனர் சிபியின் எழுத்து என அனைத்துமே மிகவும் சிறப்பாக அமைந்ததால் மட்டுமே படம் மிகவும் கொண்டப்பட்டது.

ஆரம்பம் முதலே தன்னை ஒரு ரஜினி ரசிகராக அனைத்து இடங்களிலும் முன்னிறுத்தி வரும் சிவா, இப்பொது அப்படி பேச பொய் ஒரு சங்கடத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். 2007ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி ரஜினி, ஸ்ரேயா, விவேக், ரகுவரன் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் “சிவாஜி”. அது வரை 100  கோடி வசூல் என்பது கனவாகவே இருந்ததை இந்த படம் சாதித்துக்காட்டி, முதல் 100 கோடியை வசூல் செய்த படமாக அமைந்தது.


ரஜினியின் நடிப்பு, ஷ்ரேயாவின் கிளாமர், விவேக்கின் காமெடி, ரஹ்மானின் மிரட்டும் இசை, ஷங்கர் நேர்த்தியான கதையமைப்பு என அனைத்தும் சிறப்பாக அமைய படத்தை தென்னிந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இன்றளவும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பனால் பார்ப்பவர்கள் அதிகம். ரஜினியின் வெற்றி படங்களில் மிக முக்கியமான படமான இதை அவருடைய பிறந்தநாளின் போது, வருடாவருடம் ரீ-ரிலீஸ் செய்து ரஜினி ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி வருகிறார்கள்.


அண்மையில் 15ஆம் ஆண்டை நிறைவு செய்த இந்த படத்தை குறித்து தயாரிப்பு நிறுவனம் ஏ.வி.எம் வீடியோ வெளியிட, ரஜினி தன்னுடைய மகிழ்ச்சியை ஆடியோ ஒன்று வெளியிட்டு மகிழ்ந்தார். இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயன் நேற்று ஒரு ட்வீட் போட்டு ரசிகர்களிடம் கலாய் வாங்கி கொண்டிருக்கிறார்.


Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்