
அகில உலக சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் சிவா. ரேடியோவில் ஜாக்கியாக, பிரபல தொகுப்பளராக இருந்த இவரை பின் 2001ஆம் 12B N என்ற படத்தில் நடிகர் ஷ்யாமின் நண்பராக நடித்து சினிமாவில் அறிமுகமானார். பின்னர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய முதல் படமான “சென்னை 28” படத்தில் நாயகனாக அறிமுகமானார். பின்னர் சரோஜா, வா, தமிழ் படம், பதினாறு, கலகலப்பு, தில்லு முல்லு, 144, வணக்கம் சென்னை என தொடர் படங்கள் நடித்து வருகிறார்.
காமெடி ஹீரோவாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இவர், பல மீடியா ப்ரோக்ராமிலும் தன்னுடைய காமெடி டைமிங் நிரூபித்து வருகிறார். இப்பொது இவர் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “காசேதான் கடவுளடா” படம். 1972ஆம் ஆண்டு வெளியான “காசேதான் கடவுளடா” படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் இந்த படத்தில் முன்னர் முத்துராமன், லட்சுமி, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா என பலர் நடித்துள்ளனர். அப்போதே படம் வெளியாகி மிக பெரிய அளவில் காமெடி வெற்றியடைந்த படமாக உருவெடுத்தது.
இந்த படத்தை அப்படியே மறு ஆக்கம் செய்து, தயாரித்து வருகிறார்கள். சிவா, பிரியா ஆனந்த், ஊர்வசி, கருணாகரன், யோகி பாபு, சிவாங்கி முதலானோர் நடித்து வருகிறார்கள். காமெடியில் சிறப்பாக நடித்து வரும் சிவா இந்த படத்தில் நடிப்பதன் மூலம் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. என்.கண்ணன் என்பவர் இசையமைத்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
Video Courtesy – Sun tv