தற்போது தெலுங்கானா கவர்னரும், தமிழக பா.ஜ.க கட்சி உறுப்பினருமான திரு.தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு அறிமுகம் தேவையில்லை. நீண்ட நெடிய அரசியல் பின்புலம் கொண்டு இப்பொதும் அரசியலிலும் துடிப்புடன் செயல் பட்டு வரும் இவர் பிரபல காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் ஆவார். இவரது கணவரும், மருத்துவருமான சவுந்தரராஜன் ஶ்ரீ ராமசந்திரா மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

தமிழிலுள்ள பல முக்கிய தமிழ் நாளிதழ் மற்றும் வார இதழ்களுக்காக, ஏராளமான மருத்துவ மற்றும் பல வெளிமொழி அரசியல் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நீண்ட காலமாக மேலாக தனது பகுதியில் மருத்துவராக மிகவும் பிரபலமாக இருக்கிறார். பா.ஜ.க தொண்டர்கள் இவரை பாசத்துடன் “தமிழகத்தின் சுஷ்மா ஜி” என அழைக்கின்றனர்.

மருத்துவம் பயின்று நீண்ட காலமாக அதனை தொடர்ந்து வரும் தமிழிசை அண்மையில் விமானத்தில் திடீர்ன்னு ஒருவருக்கு கொடுத்த மருத்துவ உதவி நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது. ஹைதராபாத்தில் இருந்து வாரணாசி சென்றிருந்தார். நேற்று இரவு 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து ஐதராபாத் வழியாக சென்னை புறப்பட்ட விமானத்தில் ஐதராபாத்துக்கு சென்றார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது, விமானம் பறந்து கொண்டிருந்தபோது பயணி ஒருவர் உடல் முழுவதும் வியர்த்து கண்கள் சொருகிய நிலையில் மயங்கி கொண்டிருந்ததை விமான பணிப்பெண் கவனித்து உள்ளார். அவர் விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருக்கிறார்களா என கேட்டமைக்கு உடனே சென்று தமிழிசை மருத்துவமுதலுதவி கொடுத்துள்ளார்.

தக்க நேரத்தில் கவனித்து உஷார்படுத்திய விமான பணிப்பெண்ணை டாக்டர் தமிழிசை விமானத்தில் பயணித்த ராணுவ அதிகாரி ஒருவர் இதை செல்போனில் படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார். இதுபற்றி டாக்டர் தமிழிசையிடம் கேட்டபோது, “தக்க நேரத்தில் அந்த பணிப்பெண் கவனித்துள்ளார். அவருக்கு ரத்த அழுத்தம் மிகவும் குறைந்து போயிருந்தது. தலையும் குலைந்து விழும் நிலையில் இருந்தார். கவனிக்காமல் இருந்திருந்தால் மயக்க நிலையை அடைந்து இருப்பார் என்றார். இந்த சம்பவம் வெளிவந்த பின்பு காட்சி பாரபட்சமில்லாமல், திருமதி. தமிழிசைக்கு பல்வேறு இடங்களிலும் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
