கனடாவில் உள்ள எந்திரனுடன் விளையாடிய சிவாங்கி.! இன்னும் குழந்தையாவே இருக்காங்களே

வெளியிட்டது

சிவாங்கி, தனது youtube பக்கத்தில் கனடாவில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். விஜய் டிவியின் மிக முக்கிய நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. மூன்று சீன்களாக மக்களை சிரிக்க வைத்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் மிகையில்லை. இதன் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளனர். நடிகர் அஸ்வின், பாலா, புகழ் போன்றவர்கள் இதற்கு முன் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடம் அறிமுகம் பெற்றாலும் இந்த நிகழ்ச்சி மூலமே மிகவும் பிரபலமானார்கள். அந்த வரிசையில் விஜய் டிவியில் முன்னர் சூப்பர் சிங்கரில் பாடகராக இருந்த போது கூட இல்லாத அளவிற்கு புகழை சேர்த்து இப்பொது மிகவும் மக்களை ரசிக்கவைக்கும் நபராக இருப்பவர் சிவாங்கி. ஆண் கோமாளிகள் மத்தியில் பெரிய காமெடி முன்னனுபவம் இல்லாமல் இதில் கலந்து கொண்டு மிகவும் காமெடியில் அசத்தி வருகிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கனடாவில் உள்ள எந்திரனுடன் விளையாடிய சிவாங்கி.! இன்னும் குழந்தையாவே இருக்காங்களே 1

இதன் மூலம் வெள்ளித்திரையில் சில பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன. ஏற்கனவே இவர் நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தில் காமெடி வேடத்தில் தோன்றி நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். பாடல்கள் படுவதையும் கைவிடாத இவர், Podcast நடத்தி அதில் பாடி வருகிறார். மேலும் தற்போது ஆல்பம் பாடல் வெளியிடவும் தயாராகி வருவதாக ஒரு இன்ஸ்டாகிராம் கேள்வி பதில் நேரத்தில் தெரிவித்து இருந்தார். அவ்வப்போது போட்ஷூட்கள் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டு வரும் இவர், சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் பெறவும் இதன் மூலம் பெற முயற்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கனடாவுக்கு சென்றுள்ள சிவாங்கி அங்கிருந்து சில வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். அங்கு நயாகரா அருவி போன்ற இடங்களுக்கு சென்று அதை வீடியோவாக எடுத்து பதிவேற்றி வருகிறார். அப்போது அங்கு எந்திரன் ரஜினி போல ஒருவர் அமர்ந்து இருக்க அவரிடம் சென்று ஒரு வீடியோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

Youtube Video Code Embed Credits: Sivaangi Krishnakumar

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்