சின்னத்திரையின் ஹாசினிக்கு 22வது பிறந்தநாள்..கேக் வெட்டி கொண்டாடிய சிவாங்கி | Sivaangi

வெளியிட்டது

குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி தனது 22வது பிறந்த நாளை கேரளாவில் உள்ள தனது வீட்டில் கொண்டாடியுள்ளார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இவருடைய காமெடியான குரலும், நன்றாக பாடும் திறமையும் இவரை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது என்றால் அது மிகையில்லை. காமெடி திறமையை குத் வித் கோமாளி மூலம் வெளிப்படுத்தினார். தொடர்ந்து மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து வருகிறார் சிவாங்கி. இவரின் க்யூட்டான சேட்டைகளை ரசிக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையின் ஹாசினிக்கு 22வது பிறந்தநாள்..கேக் வெட்டி கொண்டாடிய சிவாங்கி | Sivaangi 1

அஸ்வினுடன் இணைந்து இவர் செய்த க்யூட்டான விஷயங்கள் ரசிக்கும்படியாக இருந்தது. சீசன் 2 இவ்வளவு வெற்றிகரமாக செல்ல சிவாங்கியும் ஒரு காரணமாக இருந்தார் என்பது மறுக்கமுடியாத உண்மை. இந்த நிகழ்ச்சியால் கிடைத்த வரவேற்பையடுத்து சில படங்களில் பாடும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. மேலும் பட வாய்ப்புகளும் அவருக்கு வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் படத்தில் செம்ம க்யூட்டாக நடித்து இருந்தார் சிவாங்கி. சமூக வலைத்தளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் ஷிவாங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம். இவரது யூடியூப் பக்கத்தில் Vlogs வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். Youtube video code embed credits: Galatta

நேற்று ஷிவாங்கிக்கு 22 வயது நிறைவடைந்துள்ளது. கேரளாவிற்கு ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுள்ள அவருக்கு அவரின் குடும்பத்தினர் சர்ப்ரைஸ் ஆக பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. குடும்பமே கூடி அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளது. ஷிவாங்கியின் ரசிகர்கள் சின்னத்திரை ஹாசினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்