சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமான சிவாங்கி, தற்போது பிரபல இசையமைப்பாளர் ஒருவரின் மகனுடன் ரொமான்டிக்காக நடனமாடி பாட்டு பாடி அந்த வீடியோவை தனது youtube பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா பாடலை பாடிய பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் சிவாங்கி. தன்னால் சாதிக்க முடியாததை தன் மகள் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு முறையாக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார். அதன் மூலமாக சிவாங்கி சூப்பர் சிங்கரில் கலந்து கொண்டார். ஆனால் சூப்பர் சிங்கரில் வெற்றி பெற முடியாத நிலைக்கு சிவாங்கி தள்ளப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அடி எடுத்து வைத்தார் சிவாங்கி. இந்த நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடல் மட்டுமல்லாமல் தன்னால் நன்றாக காமெடியும் செய்ய முடியும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நிரூபித்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் பெருகினர். தற்போது சிவாங்கி பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்திருந்தார். தற்போது வடிவேலுவுடன் இணைந்து நாய் சேகர் படத்திலும் அவர் நடித்து வருகிறார். தொடர்ந்து கைவசம் பல படங்களை வைத்து இருக்கிறார். சில படங்களில் பின்னணி பாடியும் இருக்கிறார். இந்த நிலையில் அடிக்கடி ஆல்பம் பாடி அந்த பாடல்களை தனது instagram அல்லது youtube பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் சிவாங்கி. தற்போது பிரபல இசையமைப்பாளராக இருக்கும் வித்யாசாகரின் மகனான ஹர்ஷவர்த்தனுடன் இணைந்து தேன் தேன் பாடலை பாடியிருக்கிறார்.
23 வயது ஆகும் வித்தியாசாகரின் மகன் ஹர்ஷவர்த்தன் உட்ன் இணைந்து அடிக்கடி ஆல்பம் பாடல்களை பாடி அதை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார் சிவாங்கி. இந்த வீடியோக்கள் பல லட்சம் பார்வையாளர்களை தாண்டுவது வழக்கமாக இருக்கிறது. தற்போது அந்த வகையில் ஹர்ஷவர்த்தனுடன் இணைந்து செம்ம ரொமான்டிக்காக இந்த பாடலை பாடியும் அதற்கு ஏற்றபடி நடனமும் ஆடி இருக்கிறார். இவர்களின் இந்த க்யூட் Pair அழகாக இருக்கிறது என்று பலர் கமெண்ட்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7