ஷகீலாவால் நடந்த கடைசி நிமிட ட்விஸ்ட்.! முகம் வாடிய நிலையில் கடைசி வரை நின்று இருந்த சிவாங்கி.!

வெளியிட்டது

இன்றைய எபிசோடில் சிவாங்கிக்கு பாகற்காய் வந்ததால் அவரது முகமே வாடிய நிலையில் காணப்பட்டது. மேலும் அவர் இந்த நிகழ்ச்சி முடியும் வரை சோகத்துடனே இருந்து வந்தார். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதலிடம் வகித்து வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசன்ன்கள் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி தற்போது குக்காக களம் இறங்கி இருக்கிறார். சிவாங்கியை காப்பாற்றுவதற்காக பலரும் எலிமினேட் செய்யப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வரும் இடையில் சமீபத்தில் விளக்கம் அளித்து இருந்த சிவாங்கி தான் ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை சமைக்க கற்றுக் கொண்டு வருவதாகவும், ஒருவரின் உழைப்பை மிக ஈசியாக கீழே தள்ளி விடாதீர்கள் என்றும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான டாஸ்குகள் வைக்கப்பட்டிருந்தது. அதில் கடந்த மூன்று சீசன்களில் வந்த குக்குகள் இம்யூனிட்டியை வென்றால் அடுத்த வாரம் அனைத்து குக்குகளும் எலிமினேஷன் ரவுண்டுக்கு தகுதியானவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

ஷகீலாவால் நடந்த கடைசி நிமிட ட்விஸ்ட்.! முகம் வாடிய நிலையில் கடைசி வரை நின்று இருந்த சிவாங்கி.! 1
இந்த நிலையில் இந்த வாரம் இம்யூனிட்டி சுற்று நடைபெற்றது. அதில் அட்வான்டேஜில் குரேஷி மற்றும் ரோஷினி இருவரும் வெற்றி பெற்றிருந்தனர். விசித்ரா, சிவாங்கி, ஷகீலா மற்றும் ஷெரின் ஆகியோர் முதல் ரவுண்டில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு சென்றனர். இந்த சுற்றில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே இம்யூனிட்டி வென்றதாக அறிவிக்கப்படும். இரண்டாவது சுற்றில் சிவாங்கி தனக்கு பாகற்காய் வந்துவிட்டதால் தன்னால் பாகற்காயை சமைக்க முடியாது என்றும் இந்த சுற்றில் இருந்து தான் வெளியேறி கொள்கிறேன் என்றும் கூறினார். இதனால் கோபம் அடைந்த தாமு, 15 வாரங்கள் ஆகிவிட்டது, எதைக் கொடுத்தாலும் சமைக்க வேண்டும், நடுவில் வந்து நான் சமைக்க மாட்டேன் என்று இவ்வாறு ஆணவமாக பேசக்கூடாது, எங்களை கோபப்படுத்தாதீர்கள் என்று பேசியிருந்தார். அதன் பின்னர் வேறு வழியில்லாமல் பாகற்காயை வைத்து உணவை சமைத்து முடித்து இருந்தார் சிவாங்கி.

சிவாங்கி பாகற்காயை வைத்து தூத்துக்குடியில் பேமஸ் ஆக இருக்கும் மக்ரோனி போல் ஒன்று செய்திருந்தார். அந்த சுவை நன்றாக இருந்ததாக நடுவர்கள் கமெண்ட் செய்திருந்தனர். இருப்பினும் போன வாரம் பாகற்காய் வைத்து ஸ்வீட் செய்ய வேண்டும் என்று மைம் கோபி அட்வான்டேஜை பயன்படுத்தி இருந்தார். அதற்கு காரணமாக அவருக்கு கோமாளியாக இருந்த குரேஷி இருந்தார். சிவாங்கி தான் நமக்கு சவாலான குக், அவருக்கு இந்த டாஸ்க் கொடுக்கும்படி மைம் கோபிக்கு அறிவுறுத்தயிருந்தார் குரேஷி. இதனால் போன முறையே சிவாங்கி பாகற்காயை சமைக்க முடியாமல் திணறியிருந்தார். இந்த முறையும் பாகற்காய் வந்ததால் அவர் சரியாக சமைக்கவில்லை. இம்யூனிட்டி வென்ற சகிலாவை அனைவரும் சென்று பாராட்டி அது கூட சிவாங்கி வாடிய முகத்திலேயே காணப்பட்டார். பின்னர் நிகழ்ச்சி முடியும்போது அனைவரும் நடனமாடிய நிலையில் நடனம் ஆடாமல் அவர் ஒரு மூலையில் சென்று சோகமாக நின்றிருந்தார்..! அனைவரும் சிவாங்கியை வைத்து தாமு பிராங்க் செய்கிறார் என்று எண்ணியிருந்த நிலையில், அது பிராங்க் இல்லை உண்மையில் சிவாங்கி பாகற்காய் வந்ததால் கோபத்தில் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிந்தது.

Youtube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்