சிவாங்கி உன் எல்லா வீடியோ பாத்து இருக்கேன் நீ ஒரு எனர்ஜி பூஸ்டர்.! சிவாங்கியை பாராட்டிய ஸ்ரேயா கோஷல்.!

வெளியிட்டது

ஸ்ரேயா கோஷலை நேரில் சந்தித்து இருக்கிறார் சிவாங்கி. அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து எனது கனவு நினைவானது இது எனக்கு மறக்க முடியாத தருணம் என்று பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவிற்கு வாக்குகள் குவிந்து வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் சிவாங்கி. தனது காமெடியான பேச்சுக்களாலும், எதார்த்தமான கேரக்டராலும் பலருக்கும் பிடித்தமான நபராக இருக்கிறார். ஆரம்பத்தில் இவர் பாடும் பொழுது குரல் ஒரு மாதிரியாகவும் பேசும்பொழுது வேறு மாதிரியாகவும் இருந்ததால் இவர் பலராலும் விமர்சிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு திருப்பு முனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு பிரபலமாக இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சிவாங்கி உன் எல்லா வீடியோ பாத்து இருக்கேன் நீ ஒரு எனர்ஜி பூஸ்டர்.! சிவாங்கியை பாராட்டிய ஸ்ரேயா கோஷல்.! 1

மேலும் சில படங்களிலும் நடித்து முடித்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு பின்னணி பாடும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. மேலும் பல படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்று அவர் இந்தியாவின் பிரபல பாடகியாக இருக்கும் ஸ்ரேயா கோஷலை சென்று சந்தித்து இருக்கிறார். அதில ஸ்ரேயாவை பார்த்த பின்பு சிறு குழந்தை போல துள்ளி குதித்து கொண்டிருக்கிறார்.

 

தற்போது சிவாங்கி ஸ்ரேயா கோஷலை சந்தித்திருக்கும் வீடியோவை பகிர்ந்து இது எனது வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்னுடைய கனவு நினைவானது என்று கூறியிருக்கிறார். மேலும் உங்களை நான் இன்ஸ்பிரேஷன் ஆகி எடுத்துக் கொண்டேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்கு பதில் அளித்த ஸ்ரேயா கோஷல் நான் உங்களின் வீடியோக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன் என்று கூற சிவாங்கி சிறு குழந்தை போல் துள்ளிக் குதித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது நீங்களும் அந்த வீடியோவை காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video..!

 

Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்