கனடாவுக்கு ஒரு டிவி நிகழ்ச்சிக்காக சென்றுள்ள சிவாங்கியை ஹோட்டல் ஊழியர்கள் அடையாளம் கண்டு கொண்டு பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானவர் சிவாங்கி. இவருக்கு இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பெயரும் புகழையும் விட குக் வித் கோமாளியில் இவர் கோமாளியாக செய்த காமெடி தான் பலருக்கும் பிடித்திருந்தது. இந்த நிகழ்ச்சிகளில் அஸ்வின் உடன் சேர்ந்து இவர் செய்த காமெடி கலாட்டாக்கள் பலரின் மனதையும் கவர்ந்திருந்தது. மூன்று சீசன்களிலும் கோமாளியாக வந்து சிவாங்கி அசத்தியிருந்தார். தற்போது பல படங்களிலும் பின்னணி பாடல்களை பாடி வருகிறார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

சமீபகாலமாக சிவாங்கிக்கு வெளிநாடுகளில் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அப்படி ஒரு நிகழ்ச்சிக்காக தற்போது கனடாவில் ஒரு தொலைக்காட்சியில் பேட்டி அளிப்பதற்காக சென்றிருக்கிறார். அவருடன் பிரியங்கா, பரத், அய்யனார், ஸ்ரீதர் சேனா போன்ற சூப்பர் சிங்கர் பிரபலங்களும் உடன் சென்றிருக்கின்றனர். சிவாங்கி ஒரு யூடியூப் சேனலையும் சொந்தமாக நடத்தி வருகிறார். அவர் எங்கு சென்றாலும், எந்த நிகழ்ச்சி என்றாலும் அதை வீடியோவாக எடுத்து அந்த சேனலில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது கனடா செல்லும் வழியில் நடக்கும் விஷயங்களை Vlogs ஆக எடுத்து பதிவிட்டு வருகிறார் சிவாங்கி.
அதுபோல அவர் கனடாவிற்கு செல்லும் வழியில் காரில் அமர்ந்து கொண்டு விளாக் வீடியோ எடுத்து வருகிறார். அப்போது அங்கே ஒரு ஹோட்டலில் ஜூஸ் ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தனர். இவரின் குரலை கேட்டு அந்த ஹோட்டலில் இருக்கும் தமிழ் பேசும் வேலையாட்கள் சிவாங்கி என்று அடையாளம் கண்டு கொண்டனர். மேலும் அவர்கள் பின்னால் அமர்ந்திருந்த சூப்பர் சிங்கர் பிரபலங்கள் அனைவரையும் அடையாளம் கண்டு கொண்டனர். இதற்காக சிவாங்கி கடவுளுக்கும், விஜய் டிவிக்கும், சூப்பர் சிங்கரில் வாய்ப்பளித்த ரவூஃபா மேடமுக்கும் நன்றி தெரிவித்தார். இவர்கள் மூவர் இல்லை என்றால் தன்னை இவ்வளவு பேருக்கு தெரிந்திருக்காது என்று அவர் நெகிழ்ச்சியுடன் பேசினார் அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Sivaangi KrishnaKumar