சிவகார்த்திகேயன் இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், மாவீரன் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கின்றன. இந்த கொண்டாட்டத்தில் நடிகை அதிதி சங்கர் அவருடன் கலந்து கொண்டிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி இன்று தமிழில் முன்னணி நடிகராகவும் மாறி இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இன்று தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். பின்னர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வந்தார். திருச்சியைச் சேர்ந்த இவர் பொறியியல் படித்திருக்கிறார். தனது மிமிக்ரி திறமை மூலமாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றும் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இவருக்கு திருப்புமுனையாக அமைந்த ஒரு நிகழ்ச்சி என்று சொன்னால் அது இது எது தான். இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி, மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்தார். பின்னர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மெரினா என்கிற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால், பின்னர் இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் மான்கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதில் டாக்டர் மற்றும் டான் இரண்டு படங்களும் 100 கோடி வசூலை பெற்றுள்ளன. தற்போது சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் மாவீரன் என்கிற இரு படங்களில் நடித்து வருகிறார். இதில் மாவீரன் படத்தை மடோனா அஸ்வின் இயக்க, இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயனுக்கு 38வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு மாவீரன் பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இந்த கொண்டாட்டத்தில் நடிகை அதிதி சங்கரும் கலந்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் சிவாவிற்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Video Below..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O