சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது செஸ் ஒலிம்பியாட் 44 வது போட்டியின் நிறைவு விழா நடந்து வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி சுமார் பத்து நாட்கள் சென்னையில் நடந்தது. இதில் உலக நாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் பங்கேற்றனர். இது தமிழகத்திற்கு கிடைத்த ஒரு பெருமையாக கருதப்படுகிறது. இந்த துவக்க விழாவினை பிரதமர் மோடி சென்னைக்கு நேரில் வந்து துவக்கி வைத்திருந்தார். இந்தப் போட்டியை விக்னேஷ் சிவன் ஒருங்கிணைத்து இயக்கியிருந்தார். கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற இந்த போட்டி இன்று நிறைவடைந்துள்ளது. இந்த போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகன் ஆராதனா தற்போது முதலமைச்சர் முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலமாக புகழ்பெற்றார். பின்னர் மெரினா என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். தற்போது இவர் சுமார் 22 படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் இவருடன் இணைந்து சங்கரின் மகள் அதிதி நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் குடும்பத்தை பொறுத்தவரை அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். முதல் மகள் பெயர் ஆராதனா. இவர் வாயாடி பெத்த பிள்ளை என்று ஏற்கனவே ஒரு படத்தில் நடித்தும் பாடியும் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாகக ஒரு மகன் பிறந்துள்ளார் அவருக்கு தன்னுடைய தந்தை பெயரை சேர்த்து குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். அழகிய குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் சிவகார்த்திகேயனும் அவரது பிள்ளைகளும்.
சிவாவை பொறுத்தவரை நடிப்பது மட்டுமின்றி பாடுவது, பாடல் எழுதுவது, படங்கள் தயாரிப்பது என்று பன்முக திறமையாளராக இருக்கிறார்.
தற்போது இவரது மகளும் முதலமைச்சர் முன்னிலையில் இன்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியிருப்பது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. தாய் எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்றும், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்றும் ரசிகர்கள் ஆராதனாவின் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண..watch the below video…
YouTube video code embed credits: Thanthi Tv