நடிகர் சிவகார்த்திகேயனை அப்படியே உரித்து வைத்து இருக்கும் இளம் நடிகரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கி தற்போது தென்னிந்தியாவின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

2012ம் ஆண்டு ‘மெரினா’ என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் நுழைந்த அவர் சுமார் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் தனது பயணத்தை ஆரம்பித்த அவர், டாக்டர், டான் போன்ற 100 கோடி வசூல் படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மாவீரன் ‘ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தற்போது அவர் ‘அயலான்’ என்ற பேண்டஸி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகிற பொங்கல் தினத்திற்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது 21வது திரைப்படத்திலும், 23வது திரைப்படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்தியேன் போலவே இருக்கும் இளம் நடிகர் ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சபாநாயகன்’. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. இதில் அசோக் செல்வனின் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் தான் ஜெயசீலன். இவர் ஏற்கனவே பல குறும்படங்களில் நடித்துள்ளார். மேலும் ‘எரும சாணி’ போன்ற youtube தொடர்களிலும் பணியாற்றி உள்ளார். தற்போது இவர் ‘சபாநாயகன்’ படத்தில் நடித்துள்ளார்.
அவர் பார்ப்பதற்கு அப்படியே சிவகார்த்திகேயனை உரித்து வைத்துள்ளார். 10 வருடத்திற்கு முன்பு இருந்த சிவகார்த்திகேயனை பார்ப்பது போல இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Youtube Video Embed Code Credits: Saregama Tamil