விசித்ரா இந்த வீட்டுல மட்டுமில்ல, தமிழ்நாட்டுலயே இருக்க கூடாது.! கூல் சுரேஷ் செய்த செயல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. அதில் இந்த வாரம் நாமினேஷன் ஓப்பனாக நடக்கிறது. அதில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்களது உடைகளை எடுத்துக் கொண்டு வந்து நின்று கொண்டிருக்கும் நிலையில், நாமினேட் செய்பவர்கள் அவர்களின் உடையை எடுத்துக் கொண்டு வந்து குப்பை தொட்டியில் வீசி அவர்களை நாமினேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளரை நாமினேஷன் செய்யத் தொடங்குகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசித்ரா இந்த வீட்டுல மட்டுமில்ல, தமிழ்நாட்டுலயே இருக்க கூடாது.! கூல் சுரேஷ் செய்த செயல்.! 1

விளம்பரம்

முதலில் அர்ச்சனா நிக்சனை நாமினேட் செய்கிறார். அவர் காரணம் கூறும்பொழுது நான் எதற்காக நிக்சனை நாமினேட் செய்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும் எனக் கூறுகிறார். அதேபோல விஷ்ணு, பூர்ணிமாவை நாமினேட் செய்கிறார். தொடர்ந்து விசித்ரா தினேஷை நாமினேட் செய்துவிட்டு ஆரம்பத்தில் இருந்தே எனக்கும் தினேஷுக்கும் ஒத்துப் போகவில்லை என்று கூறுகிறார். கூல் சுரேஷ் விசித்ராவின் உடையை தரையில் வீசிவிட்டு இவர் தமிழ்நாட்டிலேயே இருக்கக் கூடாது என்று சொல்லி நாமினேட் செய்கிறார். இப்படியாக இந்த வார நாமினேஷன் நடந்து முடிகிறது. நேற்று நடந்த எபிசோடில் கமலஹாசன் ஒருவர் மீது ஒருவர் வன்மத்தை காட்டாமல் விளையாட்டை விளையாட்டாக விளையாடுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றார்.

தொடர்புடையவை  boy friend-க்கு முத்தம் குடுத்த ஐலா குட்டி.! வீடியோ எடுத்து சஞ்சீவிடம் போட்டு குடுத்த ஆல்யா..!

விசித்ரா இந்த வீட்டுல மட்டுமில்ல, தமிழ்நாட்டுலயே இருக்க கூடாது.! கூல் சுரேஷ் செய்த செயல்.! 3

விளம்பரம்

இருந்தபோதிலும் இந்த நாமினேஷன் முடிவுகளை பார்த்தால் இன்னமும் போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் வன்மத்தை குறைக்காமல் இருந்து வருவது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment