Categories: சினிமா

மாஸ்டர் விஜய் போல் மாறிய சிவா.! பிரின்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகை கலக்கி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களான அது இது எது, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். மேலும் இவர் ஒரு மிமிக்ரி கலைஞர் ஆவார். விஜய் டிவியில் இருந்த போது ஜோடி நம்பர் ஒன்னில் ஒரு சீசனில் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தார். பின்னர் இவருக்கு வெள்ளித் தலையில் படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்கிற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார்.

மாஸ்டர் விஜய் போல் மாறிய சிவா.! பிரின்ஸ் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு.! 1

பின்னர் அவர் எதிர்நீச்சல், மான்கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் பிரின்ஸ், அயலான் போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதில் பிரின்ஸ் திரைப்படம் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் கே வி அனுதீப் இயக்கியிருக்கிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா நடித்திருக்கிறார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் பலரும் படத்தின் டிரைலரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் பிரின்ஸ் படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் மாஸ்டர் படத்தில் வரும் விஜய் போல இருக்கிறார். கீழே சீருடை அணிந்து பள்ளிக் குழந்தைகள் இருக்கிறார்கள். இதிலிருந்து அவர் பள்ளி ஆசிரியராக நடிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்