முதல் முறையாக மகன் முகத்தை பொது வெளியில் காட்டிய சிவா..! வைரலாகும் புகைப்படம்

வெளியிட்டது

தமிழ் உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். பின்னர் ஜோடி நம்பர் 1 இல் கலந்து கொண்டு சிறப்பாக நடனமாடி டைட்டில் வென்றார். விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி தொகுப்பு மட்டுமல்லாமல் மிமிக்ரிகளும் செய்து பலரின் கவனத்தை பெற்றார். மிமிக்ரி செய்து கிடைத்த பணத்தில் தான் தன்னுடைய கல்லூரி கட்டணத்தை கட்டியதாக பல மேடைகளில் கூறியிருக்கிறார். பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

முதல் முறையாக மகன் முகத்தை பொது வெளியில் காட்டிய சிவா..! வைரலாகும் புகைப்படம் 1

மெரினா என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு 20 படங்களுக்கு மேல் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை சிவகார்த்திகேயன் தனது சொந்த முறைப் பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் பெயர் ஆர்த்தி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது மூத்த மகள் ஆராதனா.்சமீபத்தில் தான் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.

அவருக்கு தன்னுடைய தந்தை பெயரை சேர்த்து குகன் தாஸ் என்று பெயர் வைத்து இருக்கிறார் சிவா. இத்தனை காலமாக அவர் தனது மகன் முகத்தை வெளியே காட்டவில்லை. தற்போது முதல் முறையாக சிவகார்த்திகேயனின் மகன் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பார்ப்பதற்கு அப்படியே சிவா போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்