நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!

நீயா நானா நிகழ்ச்சியில் பெண் ஒருவர் கணவனை கேலி செய்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வைரலானது. இந்த வீடியோவை தொடர்ந்து கோபிநாத்திற்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாகவே நீயா நானா நிகழ்ச்சி தான் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து உள்ளது. அதற்கு முக்கிய காரணம் படிக்காத தனது கணவரை ஒரு பெண் கேலி செய்து பேசுகிறார். அவருக்கு சரியான பாடம் புகட்டும் விதமாக கோபிநாத் அவரது மகள் கையாலேயே அந்த கணவருக்கு பரிசை வழங்கினார். இதனால் பலரும் கோபிநாத்தையும், அவர் செய்த செயலையும் பாராட்டி வந்தனர். மேலும் கணவனை ஏளனமாக பேசிய அந்த பெண்ணை திட்டி தீர்த்து வந்தனர்.

நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 1

விளம்பரம்

இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் டிவி பிரபலங்கள், முன்னணி நடிகர்கள் என அனைவரும் கோபிநாத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் கோபிநாத்தின் செயலை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்டார். அதில் “மகள்களைப் பெற்ற அப்பாவிற்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது அன்று” என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால் இதை பலரும் தவறாக புரிந்து கொண்டு விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகின்றனர். தங்க மீன்கள் படத்தில் இடம்பெறும் இந்த வசனம் தான் “மகள்களை பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று” இதையே மேற்கோள் காட்டி விக்னேஷ் சிவனும் தனது பதிவில் பதிவிட்டிருந்தார்.

தொடர்புடையவை  "கைதாகும் கிரிக்கெட் வீரர் தோனி"!! செக் மோசடி வழக்கில் பீகாரில் எஃப்.ஐ.ஆர் பதிவு!! வரும் ஜூன் 28'இல் விசாரிக்கவுள்ள பீகார் நீதிமன்றம்!!!

நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 3 நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 5 நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 7 நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 9

விளம்பரம்

சேர்ந்தது அன்று என படிப்பதற்கு பதிலாக சேர்ந்தது என்று என பலரும் படித்து விட்டனர். அதாவது “மகள்களை பெற்ற அப்பாவிற்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்தது என்று” என படித்துவிட்டனர் .இதனால் பலரும் விக்னேஷ் சிவனுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். சேர்ந்தது இல்லை என பதிவிடுங்கள் என்று அவருக்கு சுட்டிக்காட்டி வருகின்றனர். பலரும் விக்னேஷ் சிவனை தமிழ் தெரியாமல் எதற்கு தமிழ் எழுத வருகிறீர்கள் என்று கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர். பலரும் விக்னேஷிற்கு ஆதரவாக, “சேர்ந்தது அன்று” என்றால் “சேர்ந்ததில்லை” என்று தான் அர்த்தம், விக்னேஷ் சிவன் சரியாகத்தான் பதிவிட்டு இருக்கிறார் என அவருக்கு ஆதரவாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 11 நீயா நானா பற்றி விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட்.! தவறாக புரிந்து கொண்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.! 13

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment