“குக் வித் கோமாளியை விட்டு விலகுறாரா? சிவாங்கி”!! “தொடர்ந்து இரண்டாவது வாரமாக நிகழ்ச்சிக்கு வராமல் இருக்கும் சிவாங்கி”!!

வெளியிட்டது

சின்னத்திரையில் இப்பொது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சி என்றால் விஜய் டிவியின் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தான். சமையல் போட்டியான இதில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கொண்டு கோமாளிகளாக வருகிறவர்கள் செய்யும் அலப்பறை தான் ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஷயமாகும். இதில் கோமாளிகளாக வரும் பாலா,புகழ், மணிமேகலை போன்றோர் தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவர் சிவாங்கி.

"குக் வித் கோமாளியை விட்டு விலகுறாரா? சிவாங்கி"!! "தொடர்ந்து இரண்டாவது வாரமாக நிகழ்ச்சிக்கு வராமல் இருக்கும் சிவாங்கி"!! 1

சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமாகி அந்த போட்டியின் அரையிறுதி சுற்று வரை சென்று தோல்வியுற்று வெளியேறினார் பாடகி சிவாங்கி. இவரை பாடகியாக மக்கள் அறிந்ததை விட கூக் வித் கோமாளியில் கோமாளியாக இவரை ரசித்தவர்கள் அதிகம். பெருமபாலும் காமெடி ஒன்றையே முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேர் மக்களிடம் நல்ல பெயரை பெற்றுள்ளனர். அதில் மிக முக்கியமானவர் சிவாங்கி.

சிவாங்கி அண்மையில் அண்மையில் வெளியான நடிகர் சிவகார்த்திகேயனின் “டான்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமையுள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் தோன்றிய இவர் பேசிய “க்ரஷ்” குறித்த வசனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. வெளியான இரண்டு வாரங்களில் இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இப்பொது விஜய் டிவியின் மிக முக்கிய அங்கமாக மாறியுள்ள இவர், பல்வேறு போட்டிகளிலும், நிகழ்ச்சிகளிலும், சில படங்களிலும் நடித்து வருகிறார். நடுவில் தன்னுடைய படிப்பையும் கரெக்ட்டாக தொடர்ந்து வருகிறார். சில நாட்கள் முன்பு கூட இவர் தொடர்ந்து வேலை செய்து வருவதால், உடல் நிலை கொஞ்சம் மோசமாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக எப்படியும் தொடர்ந்து கலந்து கொண்டு வரும் அவர், இரண்டு வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து எந்த வித விளக்கமும் போட்டி நடத்துபவர் சார்பிலும், சிவாங்கி சார்பிலும் கொடுக்கப்படவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது.

தொடர்ந்து இரண்டாவது வாரமாக சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் சிவாங்கி கலந்து கொள்ளப்போவதில்லை. இது குறித்து போட்டி தொகுப்பாளர் ரக்ஷன் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது சிவாங்கி தான் கேரளாவில் தன்னுடைய அண்ணன் திருமணத்திற்காக சென்றுள்ளதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்